"சத்தம் போடாம இரு அக்னி. ஜோதிர்மயி எழுந்திருக்க போறா. அவள் எழுந்துட்டா என்னை வேலையே செய்ய விடமாட்டாள். ''பேசிக் கொண்டே தேவையான பொருள்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
சற்றுநேரம் அங்கேயே சமாளித்து பார்த்தவன், சமையல் மேடையில் இருந்து தாவி இறங்கி அணிந்திருந்த டீ சர்ட்டை சரி செய்து கொண்டபடி வெளியே வந்தான்.
கேமராவை டேபிளில் வைத்துவிட்டு டைனிங் டேபிளில் தலை சாய்த்துக் கொண்டு கண்களை மூடினான். கண்கள் அவன் சொல்பேச்சு கேட்டது. உடம்பையும் உணர்வையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது ஒரு மாயவித்தை. அதை கற்று தேர்ந்தவர்களுக்கு நரம்பும், எலும்பும் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பைப் போல சொல்பேச்சு கேட்கும்.
பத்து நிமிடம் உறக்கத்தின் வழி வேறொரு உலகத்துக்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தவனை, தியா வந்து கோள்களைப் பற்றி குலுக்கி எழுப்பி விட்டாள். தூக்கத்தை துரத்திக் கொண்டு வந்த கொட்டாவியை புறங்கையால் தடுத்துக் கொண்டே தியாவைப் பார்த்தான்.
"எல்லாம் ரெடியா தியா. ?"'
"அச்சு. அதுக்குள்ளே தூங்கியாச்சு. வர வர ரொம்ப சோம்பேறி ஆயிட்டு வர்றே அக்னி. '"' அலுத்துக் கொண்டே முன்னே நடக்க, "நீ என்னவோ பேசிக்க, ஆனால் பத்து நிமிசத்தில் வேலையை முடிச்சிட்டு என்னை ஆளை விடு"' என்பதுபோல அவள் பின்னால் எந்த எகிர்ப்பும் இல்லாமல் சென்றான்.
எப்போதும் கேமராவை ஆங்கிள் பார்த்து அதற்கான ஸ்டாண்டில் பொருத்திவிட்டு தன்பாட்டுக்கு ஷூட் செய்ய ஆரம்பித்து விடுவாள். எப்போது அக்னி வீட்டில் இருந்தாலும், வம்பிழுக்கவாவது அவன் கையில் கேமராவை தந்து நிறுத்தி விடுவாள்.
Denne historien er fra August 28, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 28, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
எத்தனை 94 மனிதர்கள்?
எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விஷ்ணு புராணம் தீபாவளி
தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.
ரகுல ப்ரீத் சிங்!
நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.
வாரணாசியில் முழு நிலவு நாள்!
நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.
அம்மா பொருத்தம்
இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சோபிதா நலங்கு!!
நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.