
அணியின் டாப், மிடில் ஆா்டா் பேட்டா்களை வங்கதேச வேகப்பந்து வீச்சாளா் ஹசன் மஹ்முத் முற்றிலுமாக முடக்க, 144 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ரவிச்சந்திரன் அஸ்வின் - ரவீந்திர ஜடேஜா பாா்ட்னா்ஷிப், அணியை சரிவிலிருந்து மீட்டது.
அஸ்வின் தனது 6-ஆவது டெஸ்ட் சதத்தையும், சொந்த ஊரான சென்னையில் 2-ஆவது சதத்தையும் பதிவு செய்தாா். முதல் நாள் முடிவில் அவரோடு ஆட்டமிழக்காமல் நிற்கும் ஜடேஜாவும், 86 ரன்களுடன் தனது 5-ஆவது டெஸ்ட் சதத்தை நெருங்கியிருக்கிறாா்.
ஹசன் மஹ்முத் ஆதிக்கம்; ஜெய்ஸ்வால் நிதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீசத் தீா்மானித்தது.
இந்தியாவின் இன்னிங்ஸை யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சா்மா தொடங்கினா். நிதானமாக ஆடிய இவா்களில் ரோஹித், 6-ஆவது ஓவரில் ஹசன் மஹ்முத் பந்துவீச்சில் ஷான்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அவா் 1 பவுண்டரியுடன் 6 ரன்களே எடுத்திருந்தாா்.
தொடா்ந்து வந்த ஷுப்மன் கில்லும், ஹசன் மஹ்முத் வீசிய 8-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் லிட்டன் தாஸ் கைகளில் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். 4-ஆவது பேட்டராக விராட் கோலி விளையாட வர, ரசிகா்கள் உற்சாக கோஷத்துடன் வரவேற்றனா்.
ஆனால், அவரையும் 6 ரன்களுக்கே பெவிலியனுக்கு அனுப்பி ரசிகா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது வங்கதேசம். அவரும் ஹசன் மஹ்முத் வீசிய 10-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்தாா். இதனால் 34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து நின்றது இந்தியா.
Dit verhaal komt uit de September 20, 2024 editie van Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen
Dit verhaal komt uit de September 20, 2024 editie van Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen

வேளாண்மையில் காலநிலை மாற்ற சவாலை எதிர்கொள்ள முன்மாதிரித் திட்டம்
காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு விவசாயம் செய்ய முன்மாதிரித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலர் வ.தட்சிணாமூர்த்தி கூறினார்.

ஹமாஸ் நிபந்தனையை நிராகரித்தது இஸ்ரேல்
அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்க போர் நிறுத்த நீட்டிப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு விதித்த நிபந்தனையை இஸ்ரேல் அரசு நிராகரித்துள்ளது.

1,000 உழவர் நல சேவை மையங்கள் - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை, மார்ச் 15: தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று மாநில அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வேலையிலும் இப்படி சிலர் உண்டு!
கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்னும் பழமொழிப்படி, சிலர் எந்த நேரமும் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்கள்.

பேரவைத் தலைவருடன் செங்கோட்டையன் சந்திப்பு
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை சந்தித்தார்.

வாஷிங்டனில் மோசமடைந்த உள்கட்டமைப்புகள்: மோடி, பிற தலைவர்கள் பார்ப்பதை விரும்பவில்லை
'வாஷிங்டனுக்கு அண்மையில் வருகை தந்த பிரதமர் மோடி மற்றும் பிற தலைவர்கள், இங்கு அரசுக் கட்டடங்களுக்கு அருகே மோசமடைந்த உள்கட்டமைப்புகளைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை; எனவே, அவர்கள் வருகைக்கு முன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஆழ்ந்த உறக்கமல்ல... அபாய ஒலி!
குறட்டை விட்டு தூங்குவது ஆழ்ந்த உறக்கம் அல்ல; தூக்கத்தின்போது ஏற்படும் சுவாசத் தடை கள்தான் குறட்டை ஒலி. இதனை முறையாகக் கவனித்து சிகிச்சை பெறாவிட்டால், அது மூச்சுத் திணறலாக மாறி, உயிருக்கு அச்சுறுத்தலாகலாம்.

வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு: தேர்தல் ஆணையம் ஆலோசனை
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசிக்க முடிவு செய்துள்ளது.

மாநிலங்களின் தற்சார்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும்
நிதி, கல்வி போன்ற பல விஷயங்களில் மாநில அரசுகளின் தற்சார்புத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
பஞ்சாப் சிவசேனை தலைவர் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸார்
பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.