ProbeerGOLD- Free

முற்பகல் செய்யின்...

Dinamani Karaikal|March 17, 2025
வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ராணுவ வீரர்கள் போன்றோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை உலகெங்கும் காண்கிறோம். ஆனால், பாகிஸ்தானில் ஒரு ரயிலையே பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகருக்கு சுமார் 400 பயணிகளுடன் 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபர் விரைவு ரயில் கடந்த மார்ச் 11-இல் புறப்பட்டது.

பெரோ குன்ரி என்ற இடத்துக்கு அருகே இந்த ரயில் சென்ற தண்டவாளத்தைக் குண்டு வைத்து தகர்த்த பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற பயங்கரவாத அமைப்பினர், அந்த ரயிலுக்குள் ஏறி அதைக் கடத்தினர். பயணிகளை மீட்க பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 33 பயங்கரவாதிகள், 4 ராணுவ வீரர்கள், 21 பயணிகள் என 58 பேர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர்களில் 214 பயணிகளைக் கொன்றுவிட்டதாக பிஎல்ஏ அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் டேங்க் மாவட்டத்தில் ராணுவ நிலையின் மீது தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டவர் உள்பட தெஹ்ரீக் ஏ தலிபான் அமைப்பினர் 10 பேர் வியாழக்கிழமை (மார்ச் 13) கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவது புதிது அல்ல. இருப்பினும் அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2023-ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதல்களில் 748 பேர் உயிரிழந்தனர் என்றால், இந்த எண்ணிக்கை 2024-இல் 1,081-ஆக அதிகரித்துள்ளது.

Dit verhaal komt uit de March 17, 2025 editie van Dinamani Karaikal.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Dit verhaal komt uit de March 17, 2025 editie van Dinamani Karaikal.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE ARTICLES FROM {{MAGNAME}}Alles Bekijken
Dinamani Karaikal

வசந்த நவராத்திரி: பிரதமர் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தார்.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Karaikal

ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விஸ்வவாசு புத்தாண்டு பிறப்பான யுகாதி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Karaikal

வாகை சூடிய ஓ ஜுன் சங், மிவா ஹரிமோட்டோ

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் சென்னை 2025 போட்டியில் ஆடவர் பிரிவில் தென் கொரியாவின் ஓ ஜுன் சங், மகளிர் பிரிவில் ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ சாம்பியன் பட்டம் வென்றனர்.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Karaikal

உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன்ஃபார்ம்) சமர்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Karaikal

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு

வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Karaikal

ஐபிஎல் பௌலர்களின் புலம்பல்கள்

எந்தக் குறையும் இன்றி வழக்கமான உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் தொடங்கியுள்ளது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. தொடக்க விழா முதல் இதுவரை நடந்து முடிந்துள்ள ஆட்டங்கள் வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சாதனை படைத்துள்ளதாக ஒளிபரப்பு செய்யும் கைப்பேசி செயலி நிறுவனமும், தொலைக்காட்சி சேனல்களும் அறிவித்துள்ளன.

time-read
2 mins  |
March 31, 2025
Dinamani Karaikal

மும்மதத்தினர் பங்கேற்ற அம்மன் கோயில் விழா

திருக்குவளை அருகே வலிவலம் வீரமா காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் மும்மதத்தினர் பங்கேற்ற அம்மன் வீதியுலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Karaikal

இந்திய கம்யூ. ஆலோசனைக் கூட்டம்

திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Karaikal

வோடஃபோன்-ஐடியாவில் 49%-ஆக பங்கை உயர்த்த மத்திய அரசு முடிவு

வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தில் தனது பங்கை 48.99 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Karaikal

சைத்ரா நவராத்திரி, யுகாதி: ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து

சைத்ரா நவராத்திரி, யுகாதி, குடிபத்வா, செட்டிசந்த் ஆகிய பண்டிகைகளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 31, 2025

We gebruiken cookies om onze diensten aan te bieden en te verbeteren. Door onze site te gebruiken, geef je toestemming voor cookies. Lees meer