ProbeerGOLD- Free

‘டிரோன்’களின் தலைநகரமாகுமா தமிழகம்
Tamil Murasu|November 09, 2024
இந்தியாவின் முதல் ‘ஆளில்லா வானூர்தி’ (டிரோன்) சோதனை மையம் தமிழகத்தில் அமைய உள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.ராஜா தெரிவித்துள்ளார்.
- சதீஷ் பார்த்திபன்
‘டிரோன்’களின் தலைநகரமாகுமா தமிழகம்

செழிப்பான பாதுகாப்பு, விண்வெளி உற்பத்திச் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் தொழில் துறையின் தேவைகளைப் புதுமையான முறையில் நிவர்த்தி செய்வதன் மூலம் இத்துறையில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆளில்லா வானூர்தி சோதனை மையம் மூலம் இந்தியாவில் விண்வெளி, பாதுகாப்பு நிறுவனங்களைத் தொடங்குவதற்கான விருப்பமான இடமாக தமிழகம் மாறும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் பலவும் ‘டிரோன்’ துறையில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவும் இத்துறையில் முன்னோக்கிச் செல்ல நினைப்பதில் வியப்பு ஏதுமில்லை.

இந்திய அரசு வேளாண், விண்வெளி, பாதுகாப்புத் துறைகளில் ஆளில்லா வானூர்திகளின் பயன்பாட்டுக்கு ஆக அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியதை அடுத்து, மாநில அரசுகளும் அந்த வழியைப் பின்பற்றுகின்றன.

மகளிர்க்கான ஆளில்லா வானூர்தி பயிற்சித் திட்டம்

மகளிர்க்கான ‘நமோ ஆளில்லா வானூர்தி’ பயிற்சித் திட்டத்தை, கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளது இந்திய அரசு.

இதன் மூலம் 446 ஆளில்லா வானூர்திகள் தயாரிக்கப்படும் என்றும் 500 பேருக்கு அவற்றை இயக்குவதற்கான இலவசப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கருடா நிறுவனத்தின் அதிகாரி ஷ்யாம் குமார் தெரிவித்துள்ளார்.

“ஒரு வலுவான, வளர்ந்த தேசத்தைக் கட்டியெழுப்ப பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மிக முக்கியமானது. பெண்கள் பொருளியல் ரீதியில் முன்னேறும்போது வீட்டுக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களிக்கின்றனர். இந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது,” என்கிறார் ஷ்யாம் குமார்.

இத்திட்டத்தின்கீழ் வேளாண் துறையில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் 15,000 ஆளில்லா வானூர்திகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

மேலும், நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1,000 ஆளில்லா வானூர்திகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பெண் தொழில் முனைவோர்களுக்கான இலவச ஆளில்லா வானூர்தி பயிற்சித்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் கருடா ஏரோ ஸ்பேஸ் தெரிவித்துள்ளது.

Dit verhaal komt uit de November 09, 2024 editie van Tamil Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Dit verhaal komt uit de November 09, 2024 editie van Tamil Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE ARTICLES FROM {{MAGNAME}}Alles Bekijken
கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து எழுவர் உயிரிழப்பு
Tamil Murasu

கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து எழுவர் உயிரிழப்பு

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து எழுவர் மாண்டுபோயினர்; 16 பேர் காயமுற்றனர்.

time-read
1 min  |
March 16, 2025
புதுப்பிக்கப்பட்ட பென்கூலன் பள்ளிவாசலின் ரமலான் விருந்து
Tamil Murasu

புதுப்பிக்கப்பட்ட பென்கூலன் பள்ளிவாசலின் ரமலான் விருந்து

புனித ரமலான் மாதத்தின்போது நோன்பிருக்கும் அன்பர்கள், மாலை வேளையில் நோன்பு திறக்கும்போது விரும்பி நாடும் உணவு வகைகளில் நோன்புக் கஞ்சி ஒன்றாகும்.

time-read
1 min  |
March 16, 2025
Tamil Murasu

மகிழ்ச்சிதரும் இடமாக அங் மோ கியோ திகழும்

அங் மோ கியோ வட்டாரம் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல மேம்பாடுகளைக் கண்டுள்ளது.

time-read
1 min  |
March 16, 2025
‘யூடியூப்' பார்த்து தங்கம் கடத்தினேன்: நடிகை ரன்யா
Tamil Murasu

‘யூடியூப்' பார்த்து தங்கம் கடத்தினேன்: நடிகை ரன்யா

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு பிணை வழங்க பெங்களூரு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

time-read
1 min  |
March 16, 2025
கட்சிப் பேரணிகள்: கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் அறிவுறுத்து
Tamil Murasu

கட்சிப் பேரணிகள்: கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் அறிவுறுத்து

அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணி, பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் வேலை இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 16, 2025
Tamil Murasu

எட்வின் டோங்கை வரவேற்கும் ஈஸ்ட் கோஸ்ட் மசெக குழு

கலாசார, சமூக, இளையர்த் துறை அமைச்சர் எட்வின் டோங்கை மக்கள் செயல் கட்சியின் (மசெக) ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி அணி வரவேற்பதாக அக்குழுத் தொகுதிக்குத் தலைமை தாங்கும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் சனிக்கிழமை (மார்ச் 15) தெரிவித்தார்.

time-read
1 min  |
March 16, 2025
உட்லண்ட்சில் புதிய சர்வீஸ்எஸ்ஜி நிலையம் திறப்பு
Tamil Murasu

உட்லண்ட்சில் புதிய சர்வீஸ்எஸ்ஜி நிலையம் திறப்பு

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் புதிதாக சர்வீஸ் எஸ்ஜி (ServiceSG) எனும் ஒருங்கிணைந்த சேவை நிலையம் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 16, 2025
டுட்டர்டே வழக்கு: கண்ணீருடன் உயிரிழந்தோரின் குடும்பங்கள்
Tamil Murasu

டுட்டர்டே வழக்கு: கண்ணீருடன் உயிரிழந்தோரின் குடும்பங்கள்

அனைத்துலக குற்றவியல் விசாரணை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14ஆம் தேதி) முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் தமது பெயரைக் கூறியபோது, அந்தக் காட்சியை அந்நாட்டு தேவாலயம் ஒன்றில் கண்ட மக்கள் அவருக்கு எதிர்ச்சியராக வெறுப்பை உமிழ்ந்தனர்.

time-read
1 min  |
March 16, 2025
‘சக்கைக் குச்சி ஆட்டத்துக்கு’ உயிரூட்டிய பயிலரங்கு
Tamil Murasu

‘சக்கைக் குச்சி ஆட்டத்துக்கு’ உயிரூட்டிய பயிலரங்கு

இந்திய மரபுடைமை நிலையத்தில், பிப்ரவரி 23ஆம் தேதி, தாளத்திற்கேற்ப ஒன்றோடு ஒன்று உரசிய குச்சிகளின் ஒலி நிறைந்திருந்தது.

time-read
1 min  |
March 16, 2025
பேருந்துக்கான 52 வழித்தடங்களை மனனம் செய்துள்ள ஓட்டுநர்
Tamil Murasu

பேருந்துக்கான 52 வழித்தடங்களை மனனம் செய்துள்ள ஓட்டுநர்

நம்மில் பலருக்குப் பணியிடம் பற்றிய பல்வேறு நினைவுகள் மனத்தில் நீங்கா இடம் பிடித்திருப்பது வழக்கம். 52 வயதாகும் தலைமைப் பேருந்து ஓட்டுநர் அப்துல் லத்திஃப் முகம்மது ரஃபிக்கு பணி சார்ந்த நினைவுகள் மட்டுமன்றிப் பேருந்து வழித்தடங்களும் நினைவில் ஆழப் பதிந்துள்ளன.

time-read
1 min  |
March 16, 2025

We gebruiken cookies om onze diensten aan te bieden en te verbeteren. Door onze site te gebruiken, geef je toestemming voor cookies. Lees meer