CATEGORIES
Categories
இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்தை வென்ற இந்தியா
இங்கிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு சர்வதேசப் போட்டித் தொடரில், சென்னையில் சனிக்கிழமை (25) நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்தியா வென்றது.
"அள்ளி வழங்கியது போன்று தீர்வையும் வழங்கவும்”
தேர்தல் காலத்தின் போது அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதிகளை அள்ளி வழங்கியது போன்று காலம் தாழ்த்தாது உடனடியான தீர்வாக வேலைவாய்ப்புகளை வழங்குமாறு வடகிழக்கு பட்டதாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினர் எம். ஐ. எம் புர்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாகன விபத்தில் ஒருவர் பலி
கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் லுணுஓயா பாலத்திற்கு அருகில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலஸ்தீனியர்களை விடுவிக்க மறுக்கும் இஸ்ரேல்
பாலஸ்தீனியர்களை வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று, இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வுகளை ஏப்ரலில் நடத்த ஏற்பாடு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 50 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏப்ரல் 26,27 மற்றும் 28 ஆகிய தினங்களில் பொன்விழா நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலை பீடத்தில் கல்வி கற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பொன் விழா நிகழ்வை நடத்த தீர்மானித்துள்ளனர்.
புலிகளின் தங்கத்தை தேடிய 10 பேர் கைது
அதிநவீன ஸ்கேனர் இயந்திரமும் கைப்பற்றப்பட்டது
மாணிக்கக்கல் அகழ்ந்த நால்வர் கைது
நோ ர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போற்றி தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு சந்தேக நபர்கள், நோர்வூட் பொலிஸ் அதிகாரிகளால் சனிக்கிழமை (25) இரவு கைது செய்யப்பட்டனர்.
காலியில் கோர விபத்து: 29 பேர் படுகாயம்
காலி, இமதுவஅங்குலுகஹா சந்திப்பில் மூன்று பேருந்துகள், ஞாயிற்றுக்கிழமை (26) காலை 8:30 மணியளவில் மோதியதில் குறைந்தது 29 பயணிகள் காயமடைந்தனர்.
இந்திய உப்பு இன்று வருகிறது
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெட்ரிக் டன் உப்பு அடங்கிய முதல் கப்பல் இலங்கையை திங்கட்கிழமை (27) வந்தடைய உள்ளதாக மாநில வணிக இதர கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
6 கிலோ 800 கிராம் என்.சியுடன் ஒருவர் கைது
6 கிலோ 800 கிராம் என்.சி என்ற போதைப்பொருளுடன் நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
யோசித்தவுக்கு விளக்கமறியல்
ரத்மலானை பகுதியில் 3,40,000,000 ரூபாய்க்கு நிலம் மற்றும் வீடு வாங்கியது தொடர்பாக பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அளுத்கடை நீதவான் பவித்ரா சஞ்சீவனி சனிக்கிழமை (25) மாலை உத்தரவிட்டார்.
"மிகையொலிக்கு கட்டுப்பாடு"
இரவு விருந்துகளின் போது மிகையொலி எழுப்பும் கருவிகளை பயன்படுத்துவதற்கான நேர வரம்பை இரவு 10 மணி வரை மட்டுப்படுத்தும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
வாழைச்சேனை மாயமான இருவரும் சடலங்களாக மீட்பு
வாழைச்சேனையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சனிக்கிழமை (25) அடித்துச் செல்லப்பட்ட காணாமல் போன இருவரும் ஞாயிற்றுக்கிழமை (26) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: செல்சியை வீழ்த்திய மன்செஸ்டர் சிற்றி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (25) நடைபெற்ற செல்சியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றது.
தேடுதல் நடத்தச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு
மீகஹகிவுல, அக்கலஉல்பத கிராமத்திற்கு மேலே உள்ள காட்டில் சட்டவிரோத கஞ்சா தோட்டத்தை சோதனை செய்ய ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் சென்ற கண்டகெட்டிய பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர், துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்து மீகஹகிவுல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஞ்சள், ஏலக்காய் மீட்பு; இருவர் கைது
புத்தளம் - கற்பிட்டி, கீரிமுந்தல் மற்றும் துறையடி ஆகிய கடல் பிரதேசங்களில் இருந்து ஒரு தொகை மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றுடன் இரு சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை (24) அன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா விபத்தில் மாநகர ஊழியர் பலி
நுவரெலியா காமினி தேசிய பாடசாலை அருகில் இருந்து விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு செல்லும் வீதியில் வெள்ளிக்கிழமை (24) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
"அரிசியை அதிக விலைக்கு விற்றால் அறிவிக்கவும்”
திடீர் சுற்றிவளைப்புகளை தீவிரப்படுத்தவும் யோசனை
நிதி உதவியை நிறுத்தினார் ட்ரம்ப்
உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியை நிறுத்த ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஊழல் மற்றும் மோசடி விசாரணைகளில் அரசாங்கத்தின் “தலையீடு இல்லை”
அடையாளம் காணப்பட்ட 11 முக்கிய வழக்குகளில் 3 வழக்குகள் ஜனவரியில் தாக்கல் செய்யப்பட உள்ளன | சட்டச் செயல்பாட்டின் நேர்மையை நிலைநாட்ட விசாரணைகள் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும்
சுமந்திரனுக்கு விசேட சலுகை?
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குறைக்கப்பட்டுள்ளது.
மோடி தலைமையிடம் இருந்து 'நிறைய கற்றுக்கொண்டேன்'
\"இந்திய பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான பணியில் இருந்து நிறைய கற்று கொண்டேன்\" என, இந்தோனேசிய ஜனாதிபதி கூறியுள்ளார்.
காங்கேசன்துறைக்கு இரவு தபால் ரயில்
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு தபால் ரயிலை ஜனவரி 31 ஆம் திகதி முதல் தினமும் இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி நிதிய சேவை பிரதேசத்துக்கு செல்கிறது
மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவைகளை வழங்கும் நோக்கில், ஜனாதிபதி நிதிய சேவை, பிரதேச செயலக மட்டத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
மத்திய கிழக்குக்கு ஜனாதிபதி விஜயம்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று அரச தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க எல்லையில் இராணுவத்தினர் குவிப்பு
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
"யார் கூறுவது பொய்”
நெல் தொடர்பில் அதிகாரிகள் கூறுவது பொய்யா அல்லது வர்த்தகர்கள் கூறுவது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
“7 இலட்சம் மாணவர்களுக்கு இலவச காலணி"
நாட்டில் சுமார் 250 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச காலணி வழங்கப்படும்.
முதலாவது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.
இலங்கையில் திருமணத்துக்கு பொது வயதெல்லை
இலங்கையில் திருமண வயதுக்கான எல்லையை திருத்துவது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவி அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.