600க்கு 600 எடுத்திருக்கும் மாணவிகள் மத்தியில் இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா?
ஆம். ஆச்சரியமேதான்! வீடற்றவராக +2 மாணவி மோனிஷா வசிப்பது, சென்னை வால்டாக்ஸ் பகுதியில் உள்ள சாலையோரம். “எனக்கு வசிக்க வீடில்லை. சிறுவயதில் இருந்தே சாலையோரத்தில்தான் என் வாழ்க்கை...” என்கிற மோனிஷா, சத்தமில்லாமல் கூடுதலாக இன்னொரு சாதனையையும் ஏற்கனவே நிகழ்த்தியிருக்கிறார்.
ஆம். ஒருகாலத்தில் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்தின் கோட்டைக்குள், அவர்களின் பெருமைமிகு லாட்ஸ் மைதானத்தில் 2019ல் வைஸ் கேப்டனாக நுழைந்து, இங்கிலாந்து வீரர்களை எதிர்த்து விளையாடி, ‘தெருவோரக் குழந்தைகளுக்கான உலகக் கோப்பையை’ வென்று வந்திருக்கிறார். இந்த நிகழ்வுக்குப்பின் ஊடகங்களின் பார்வையில் அப்போதே மோனிஷா விழுந்திருக்கிறார்.
வால்டாக்ஸ் சாலையில் மோனிஷாவின் சாலையோர வசிப்பிடம் தேடி சென்றால் புன்னகையுடன் நம்மை வரவேற்றார்.
இதுதான் என் வீடென மோனிஷா கை நீட்டியது சின்னதாக அட்டைப்பெட்டி மாதிரி தகரத்தால் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய அறை.
‘‘இதை எங்கள் வீடுன்னு சொல்ல முடியாது. இங்கிருக்கிற முப்பது குடும்பத்திற்கும் இது பொதுவான வீடு. இதில்தான் பெண்களான நாங்கள் உடை மாற்றுகிறோம். மற்றபடி குளிப்பது, காலைக் கடன்களை முடிப்பதெல்லாம் சாலையோரம் உள்ள கட்டணக் கழிப்பறையில்தான்.
மழை, வெயிலென எதுவானாலும எங்களுக்கு வாழ்க்கை தெருவோரம்தான்...” என்கிற மோனிஷா சிறு வயதிலேயே தன் அப்பாவை இழந்திருக்கிறார். அம்மா சென்னை மாநகராட்சியில் நகரசுத்தி தொழிலாளியாக வேலை செய்து வருகிறாராம்.
‘‘வால்டாக்ஸ் சாலையில் நிறைய கார்கோ மூவர்ஸ் இருக்கிறார்கள். அவர்களுடைய டிராலி, ரிக்ஷா போன்றவற்றை இரவில் சாலையோரங்களில்தான் நிறுத்தி வைப்பார்கள். பெரும்பாலும் நாங்கள் இரவில் அதில் ஏறித்தான் படுத்துத் தூங்குவோம். வயது பெண்களான எங்களுக்கு இதனால் பாதுகாப்பு இல்லாத சூழல்தான். இருந்தாலும் எங்களுக்கு வேறு வழியில்லை.
இந்திய கிரிக்கெட் அணி தோற்ற அதே ஆண்டு அதே மைதானத்தில் இவர்கள் வென்றார்கள்!
This story is from the 26-05-2023 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 26-05-2023 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.
கோலம்
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.
தேவரா பாகம் ஒன்று
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.
யோலோ
உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும் மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.
ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா.
இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!
ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும்.
மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.