அது என்ன...? சுற்றுலாவா..? ஆமாம். அத்தோடு இன்னும் ஒன்று. அது பாண்டிக்கு சரக்கு.
கொடைக்கானலுக்கு? ஆம்லெட்.
என்னது ஆம்லெட்டா என்று வாய் பிளப்பவர்களுக்கு அந்த ஆம்லெட் மேஜிக் காளான் பொடி தூவியது என்றால் கேட்க ஆச்சரியமாக இருக்கிறதா..? மலைகளின் இளவரசி... வருடந்தோறும் குளிர் சீசன்... என்று பெத்த பெயர் எடுத்த கொடைக்கானலுக்கு இந்த சுற்றுலாப் பயணிகள் வெறும் கோழிமுட்டை ஆம்லெட்டுக்காக படையெடுத் துவருவது ஆச்சரியம்தான்.
ஆனால், பாண்டி சரக்கு உடம்பை முறுக்கும் என்றால் கொடைக்கானல் பொடி ஆம்லெட் சந்திராயனுக்கே கூட்டிச் செல்லும் என்பதால் இப்போதைக்கு பாண்டிக்கு அடுத்து மட்டை ஆசாமிகளின் சொர்க்க புரி சாட்சாத் கொடைக்கானல் தான்.
கடந்த 20 வருடங்களாக கொடைக்கானலை ஆக்கிரமித்திருக்கும்... காவல்துறையை சுறுசுறுப்பாக்கியிருக்கும் மேஜிக் காளான் பற்றியும் அது கொடைக்கானல் சுற்றுலாவுக்கு அடுத்து மிகவும் பிரபலமாவதற்கான காரணங்கள் பற்றியும் தொடர்பான ஆர்வலர்களை சந்தித்து உரையாடினோம்.
கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரும், துணைவேந்தருமான கிருஷ்ணமூர்த்தி புன்னகையுடன் இது குறித்து பேச ஆரம்பித்தார்.
"ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பலவிதமான காளான்கள் வளர்கின்றன.
சிலர் 400 வகை என்கின்றனர்.
ஆனால், அதையும்விட அதிகம் என்பதுதான் எங்களது ஆய்வின் முடிவு.
மழை, காட்டு மரம், செடி, கொடிகளின் குப்பைகள்தான் பொதுவாக எல்லா காளான்களுமே வளர்வதற்கான சரியான சூழல். காளான்களில் உண்ணக் கூடிய காளான், மருத்துவ குணமுள்ள காளான், விஷக்காளான்... என்று 3 விதமான காளான்கள் உண்டு.
இந்த மேஜிக் காளான் என்று சொல்லப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையில் கிடைக்கும் காளானை ஆங்கிலத்தில் சைலோசைப் (psilocybe ) என் பார்கள்.
இந்தக் காளானில் மருத்துவ குணமும் உண்டு. மெக்சிகோ, தாய லாந்து, இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த காளானில் இருக்கும் ஒருவகை ஆல்கலைட் வேதிப் பொருளான சைலோசை பினைப் (psilocybin)பிரித்து ஒரு மருந்துப் பொருள் தயாரிக்கிறார்கள்.
This story is from the 24-11-2023 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 24-11-2023 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.