குறிப்பாக அரசே குறைந்த கட்டணத்தில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் அமைத்திருப்பது இதுவே முதல்முறை. இதனால், இந்தத் திட்டத்தைப் பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.
கொளத்தூர் அகரம் பகுதி ஜெகந்நாதன் தெருவில் உள்ள மூன்று தளங்கள் கொண்ட முதல்வர் படைப்பகம், கார்ப்பரேட் அலுவலகம் போல அத்தனை பிரமிப்பாக இருக்கிறது.
தரைத் தளத்தில் கோ-வொர்க்கிங் பகுதியும், முதல் தளத்தில் கற்றலுக்கான பகுதியும், இரண்டாம் தளத்தில் ஸ்நாக்ஸ் கேண்டீன் பகுதியும் உள்ளன. நுழையும் இடத்திலேயே செருப்பைக் கழற்றிவைத்துவிடச் சொல்கிறார்கள். அங்கிருந்தே தரை விரிப்புகளும் தொடங்குகின்றன.
முழுவதும் குளிரூட்டப்பட்ட தரைத் தளம். பத்து பதினைந்து பேர் தங்கள் லேப்டாப் முன் இருந்தபடி பரபரப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். உள்ளிருக்கும் வரவேற்பாளர், கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் பற்றி விசாரிக்க வருபவர்களுக்குத் தகவலை அளித்துக் கொண்டிருந்தார். இதனுடன் வலதுபுறத்தில், பணியாற்றுபவர்களைச் சந்திக்க வருகிறவர்களுக்கான லாபியும் உள்ளது.
‘‘நம் தமிழக முதல்வர் வடசென்னை மக்களுக்கு, குறிப்பாக படிக்கிற பசங்களுக்கும், வொர்க் பண்றவங்களுக்கும், பெண் தொழில்முனைவோர்களுக்கும் ஏதாவது பண்ணணும்னு நினைச்சாங்க. அப்படி யாக இந்த கோ-வொர்க்கிங் பிளேஸ் கம் லேர்னிங் சென்டரை உருவாக்கித் தந்திருக்காங்க...’’ என நம்மை வரவேற்றபடியே சொன்னார் படைப்பகத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான கீதா பிரியா.
‘‘இந்த கோ-வொர்க்கிங் பிளேஸ்ல 38 பேர் வரை உட்காரலாம். அரை நாளுக்கு ஒரு நபர் ரூ.50 செலுத்தினால் போதும். அதே முழு நாளுக்கு ரூ.100 சார்ஜ் பண்றோம்.
நீங்க மாதமாக புக் பண்ணினால் ரூ.2,500 கட்டணும். இது தவிர, தனியாக மூன்று சந்திப்பு அறைகள் உள்ளன. நான்கு பேர் அறைக்கு ஒரு மணிநேரத்துக்கு 150 ரூபாயும், ஆறு பேர் அறைக்கு ஒரு மணிநேரத்துக்கு 250 ரூபாய் செலுத்தணும்.
This story is from the 22-11-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 22-11-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
குடிப்பழக்கமும் மோதிர விரலும்!
உண்மையில் இப்படி யெல்லாம் ஆய்வு செய்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!
சமீபத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர் நாடறிந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?
கடந்த வாரம் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் பொருட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.
சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!
கோலிவுட்டில் இது பார்ட்டுடூ சீசன். அந்த வகையில் விஜய்சேதுபதி வெளியாகி வெற்றியடைந்த ‘சூதுகவ்வும்”.
தாராவி மறுசீரமைப்புத் திட்டம்...ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது.
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை!
இது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு :
தாத்தா நடிகர், அப்பா ஸ்டண்ட் மேன், அம்மா நடிகை...நான் ட்ரீம் கேர்ள்!
'பொண்ணுங்களோட கற்பனையா மட்டும் தான்டா நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது!' 'சூப்பர் மாமா...'
விடுதான் பெண்களுக்கு பெரிய ஆபத்து!
'சராசரியாக உலகளவில் இந்த சுமார் 140 பெண்கள் தினமும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
8 வயது உலக சாம்பியன்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு 'நவம்பர் மாதத்தின் மதிய வேளை. ஹைதராபாத்தில் உள்ள ஓர் அமைதியான, விசாலமான ஹால். அங்கே சதுரங்கப் போட்டி ஆரம்பமானது.ஒரு பக்கம் இந்தியாவின் முன்னணி சதுரங்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குகேஷ் அமர்ந்திருந்தார்.
ஹெல்மெட் நிச்சயதார்த்தம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம் ஜோடி ஒன்று தங்களுடைய நிச்சயதார்த்த விழாவில் மோதிரத்துடன் ஹெல்மெட்டையும் மாற்றி சாலைப் பாதுக்காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.