கர்நாடக் காங்கிரஸ் கரைசேருமா? கும்மியடிக்கும் குடும்ப அரசியல்!
Kanmani|May 10, 2023
தென் மாநிலங்களிலேயே கர்நாடகாவில் தான் குடும்ப அரசியல் உக்கிரமாக தாண்டவமாடுகிறது. பா,ஜ.க. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் குடும்ப அரசியல் ஆதிக்கம் வலுவாக உள்ளது. முதலாவதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தின் குடும்ப அரசியலை கவனிப்போம். முன்னாள் பிரதமரான தேவகவுடா, மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் நிறுவனர் ஆவார்
ஆரணலோங்கல்
கர்நாடக் காங்கிரஸ் கரைசேருமா? கும்மியடிக்கும் குடும்ப அரசியல்!

அவர் இந்தியப்பிரதமராக உயர்ந்த போதிலும் அவரது பார்வை கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சரின் கண்ணோட்டமாகவே இருந்தது. அதை தாண்டி அவரால் நோக்க முடியவில்லை.

ஒரு கட்சியின் தலைவராக இருந்த போதிலும் தனது குடும்பத்தின் நலனைத்தாண்டி வேறு எதையும் அவரால் சிந்திக்க முடியவில்லை. அவரது மகன் குமாரசாமி முன்னாள் முதலமைச்சர் ஆவார். அவர் சென்னப்பட்டினா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இத்தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சி.பி.யோகஸ்வர் போட்டியிடுகிறார். அவரது சகோதரர் எச்.டி ரேவண்ணாவும் களத்தில் உள்ளார். அதுமட்டுமல்லாமல் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி, மகன் நிகில் குமாரசாமி ஆகியோரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள்.

நிகில் குமாரசாமி இத்தேர்தலில் ராமநகரம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். ரேவண்ணாவின் மனைவி பவானி, மகன் சுரேஜ் ரேவண்ணா எம்.எல்.சி, மற்றொரு மகன் பிரஜ்வால் ரேவண்ணா எம்.பி. ஆகியோரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் முக்கிய புள்ளிகளாக செயல்பட்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாக பார்த்தால் தேவகவுடா குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் அஷ்ட திசை எங்கும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

குடும்ப அரசியலை ஏற்காத கட்சி பா.ஜ.க. என்று பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய்நோகாமல் வார்த்தை பந்தல் போட்டாலும் உண்மை இதற்கு புறம்பானது. அநேகமாக எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க.வில் வாரிசு அரசியல் கொடி கட்டிப்பறக்கிறது. இதற்கு கர்நாடகாவும் விதிவிலக்கு அல்ல.

கர்நாடகாவில் இப்போது முதலமைச்சராக உள்ள பசவராஜ் பொம்மையின் தந்தை சோமப்ப ராயப்ப பொம்மையும் கர்நாடக முதலமைச்சராக செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் கிடையாது. தனது தந்தை மறைந்து பல ஆண்டுகளான பிறகே பா.ஜ.க. பசவராஜ் பொம்மை சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

This story is from the May 10, 2023 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the May 10, 2023 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KANMANIView All
எத்தனை 94 மனிதர்கள்?
Kanmani

எத்தனை 94 மனிதர்கள்?

எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

time-read
1 min  |
November 06, 2024
விஷ்ணு புராணம் தீபாவளி
Kanmani

விஷ்ணு புராணம் தீபாவளி

தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.

time-read
1 min  |
November 06, 2024
ரகுல ப்ரீத் சிங்!
Kanmani

ரகுல ப்ரீத் சிங்!

நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.

time-read
2 mins  |
November 06, 2024
வாரணாசியில் முழு நிலவு நாள்!
Kanmani

வாரணாசியில் முழு நிலவு நாள்!

நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.

time-read
1 min  |
November 06, 2024
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
Kanmani

ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!

மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.

time-read
1 min  |
November 06, 2024
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
Kanmani

மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!

நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.

time-read
1 min  |
November 06, 2024
அம்மா பொருத்தம்
Kanmani

அம்மா பொருத்தம்

இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

time-read
1 min  |
November 06, 2024
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
Kanmani

அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!

இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.

time-read
3 mins  |
November 06, 2024
சோபிதா நலங்கு!!
Kanmani

சோபிதா நலங்கு!!

நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.

time-read
1 min  |
November 06, 2024
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
Kanmani

ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!

வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.

time-read
1 min  |
November 06, 2024