காமக்கொடூரன்களுக்கு சென்னை, டெல்லி எல்லாம் ஒன்றுதான் என்பதுபோல இச் சம்பவம் அமைந்துள்ளது.
சென்னையின் மையப்பகுதியிலுள்ள இந்த பல்கலைக்கழகம், எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி திங்கட்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பொறியியல் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி ஒருவரும், அதே கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் ஒருவரும் பல்கலைக்கழக மெஸ்ஸில் உணவருந்திவிட்டு, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வகக் கட்டடத்தின் பின்புறத்தில் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளனர்.
அப்போது அவர்களை தனது செல்போனில் படம்பிடித்தபடியே வந்த ஒரு மர்ம நபர், அந்த மாணவரை சரமாரியாகத் தாக்கியதுடன், இருவரும் தனிமையில் அத்துமீறிய வீடியோவைக் காட்டி, நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றால் சமூக வலைத்தளத்தில் இதைப் பதிவிடுவேன். இந்த வீடியோவை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பி உங்களை சஸ்பெண்ட் செய்ய வைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
அந்த மாணவனை மிரட்டி அங்கிருந்து துரத்திவிட்டு மாணவியை பலாத்காரம் செய்ய முற்பட, அந்த மாணவி மாதவிடாய் உள்ளதாகவும், தன்னை விட்டுவிடும்படியும் கெஞ்சியுள்ளார். அதை நம்பாத அந்த மர்ம நபர் ஆடைகளைக் களைந்து அம்மாணவிக்கு மாதவிடாய் உள்ளதைத் தெரிந்துகொண்டபின் அம்மாணவியை வேறு வகையில் பாலியல் துன்புறுத்தல்செய்துள்ளான். அதையும் அந்த மாணவிக்குத் தெரியாமல் செல்போனில் ரெக்கார்ட் செய்துள்ளான்.
This story is from the December 28-31, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 28-31, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.