அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னையை சபிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு சென்னை மக்கள் ஆண்டு தோறும் மழை வெள்ளத்தால் கடும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக சென்னையில் வந்து தங்கி ஆங்காங்கே ஆளுயர கட்டிடங்களை கட்டியுள்ளனர். அந்த அளவிற்கு இங்கு மக்கள் தொகை பெருத்துள்ளது. எவ்வளவுதான் வசதிகள் செய்து கொடுத்தாலும் இயற்கையின் முன்பு எதும் நிலைக்காது என்பதற்கு ஏற்ப அடிக்கடி சென்னைவாசிகளை ஆண்டிற்கு இருமுறையாவது இயற்கை எச்சரித்துக்கொண்டே உள்ளது. இவ்வளவு பெரிய சென்னையில் இவ்வளவு மக்கள் தொகை வாழும் இந்த மண்ணில் மொத்தமாக தண்ணீர் வெளியேற 4 வழிகளே உள்ளன. எண்ணூர் முகத்துவாரம், நேப்பியர் பிரிட்ஜ் முகத்துவாரம், அடையாறு முகத்துவாரம் மற்றும் ஒக்கியம் வழியாக கோவளம் முகத்துவாரம் என 4 வழிகளில் மட்டுமே மழைநீர் வெளியேறுகிறது.
ஒரே நேரத்தில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் இத்தவழியில் மட்டுமே நீர் செல்லவேண்டும். எனவே நீர் வெளியே செல்வதில் எப்போதுமே சென்னைக்கு சிக்கல் உள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் பெய்த கனமழையின் காரணமாக சென்னை மக்கள் பல்வேறு பாடங்களை கற்றுத் தேர்த்தனர். ஒவ்வொரு ஆண்டும் மழையின்போது தாழ்வான பகுதிகள் உள்ள மக்கள் வீடுகளுக்குள் மழைநீர் வருவதும், அவர்கள் முகாம்களில் தஞ்சம் அடைவதும், மழை விட்டவுடன் மீண்டும் தங்கள் வீட்டிற்கு வந்து இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி வருகின்றது. இதனை கொஞ்சமாவது மாற்ற வேண்டும் என்ற நோக்கில் சென்னையில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டு அவை ஓரளவிற்கு கைகொடுத்து வருகின்றன.
This story is from the October 17, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 17, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சென்னையில் 3000 மாடுகளை பராமரிக்கும் வகையில் 15 இடங்களில் கொட்டகை அமைக்கும் பணி தீவிரம்
மாநகராட்சி நடவடிக்கை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை வரிசைப்படுத்தி குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்
சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டி பார்வையாளர்களுக்கு இலவச பயணம்
இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டியை முன்னிட்டு ஆன்லைன் அல்லது அச்சிட்ட டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் பார்வையாளர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கை: இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டி .
அசாமில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்
அசாம் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சாவை போலீசார் கைது செய்து, இதுதொடர்பாக, 2 பெண்களை கைது செய்தனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி
ஆதி திராவிடர் மற்றும் பழங்கு டியினத்தை சேர்ந்தவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண உயர்வு குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்து 4 மாதங்களில் முடிவு
தமிழக அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
அனுமதியில்லாமல் இயங்கும் எம்.சாண்ட் குவாரிகள் தடை செய்யப்படுமா?
மணல் லாரி உரிமையாளர் சங்கம் எதிர்ப்பார்ட்
காரில் கடத்தி வந்து சென்னையில் சிறுசிறு கடைகளுக்கு குட்கா விற்ற 4 வாலிபர்கள் கைது
புழல் அருகே காரில் கடத்தி வந்து சென்னை பகுதிகள் உள்ள சிறு சிறு கடைகளுக்கு குட்கா பொருட்கள் விற்பனை செய்த 4 வாலிபர்களை கைது செய்த போலீசார், 110 கிலோ குட்கா, 2 சொகுசு கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சாம்ராஜ்யம் நடத்திய வி.வி.மினரல்ஸ்
தாதுமணல் கொள்ளை சாட்டையை சுழற்றிய தமிழக அரசு
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்
சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின பாதுகாப்பு காரணமாக 7 அடுக்கு பாதுகாப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.