அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 13க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அமலாக்கத்துறை (ஈடி) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இச் சோதனையில் வைத்திலிங்கம் தனது மனைவி மற்றும் மகன்கள் பெயரில் சட்டவிரோதமாக குவித்து வைத்திருந்த பல கோடி ரூபாய் சொத்துக்கான ஆவணங்கள், பத்திரங்கள், வங்கிப் பணப் பரிமாற்ற ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவன், அவரது சம்பந்தி வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தெலுகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம். நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு தங்கம் என்ற மனைவி, பிரபு, ஆனந்த பிரபு, சண்முகபிரபு ஆகிய 3 மகன்கள் மற்றும் பிரதீபா என்ற மகள் உள்ளனர். வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2011-2016ம் ஆண்டுகள் அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி துறை, நகர்புற வளர்ச்சி மற்றும் கூடுதலாக விவசாயத்துறை அமைச்சராக வைத்திலிங்கம் பதவி வகித்தார்.
அப்போது வைத்திலிங்கம் தனது பதவி காலத்தில் ராம் குழுமத்திற்கு சொந்தமான ராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் சார்பில் பெருங்களத்தூர் பகுதியில் 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகள் கொண்ட 1,453 வீடுகள் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கிய விவகாரத்தில், அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.27.90 கோடி வைத்திலிங்கம் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், வைத்திலிங்கம் தனியார் கட்டுமான நிறுவனமான ராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் அவரது மகன் நடத்தும் முத்தம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ரூ.27.90 கோடி லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அந்த பணத்தில் வைத்திலிங்கத்தின் மகன் பிரபு நடத்தும் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ரூ.23 கோடி அளவில் பூந்தமல்லி திருவெறும்பூர் பகுதியில் நிலம் வாங்கி குவித்து இருந்ததும் விசாரணையில் உறுதியானது.
This story is from the October 24, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 24, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
1 லட்சம் புதிய இளைஞர்களை அரசியலில் இணைக்க திட்டம்
‘‘அரசியல் பின்புலம் இல்லாத, 1 லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர புதிய பிரசாரம் தொடங்கப்பட உள்ளது’’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். பிரதமர் மோடி அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ மாதாந்திர நிகழ்ச்சியில் நேற்று பேசியதாவது:
ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல் கல் பண்ட்டை F27 கோடிக்கு ஏலம் எடுத்த லக்னோ
இஷான் கிஷணை F11.25 கோடிக்கு தட்டி தூக்கிய சன்ரைசர்ஸ்
ஜெய்ஸ்வால் 161, கோஹ்லி 100 ரன் குவிப்பு ரன் குவிப்பில் சிறகடித்து பறந்த இந்தியா சாகச வெற்றிக்கு இமாலய இலக்கு 534
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்டின் 3ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்த நம் வீரர்களின் அசகாய பேட்டிங்கால் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்னுடன் டிக்ளேர் செய்தது.
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவது ஏன்?
பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடனான தனது 29 ஆண்டு கால திருமண உறவை முறித்துக் கொள்வதாக, கடந்த 19ம் தேதி இரவு தனது வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் அறிவித்திருந்தார் அவரது மனைவி சாய்ரா பானு.
பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி
தற்போது ஒரே நேரத்தில் 2 தமிழ்ப் படங்களில் மாறி மாறி நடித்துவருகிறார், அஜித் குமார். மகிழ் திருமேனி இயக்கும் 'விடா முயற்சி' படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி' என்ற படத்திலும் நடிக்கும் அவரது ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
2,000 கோடியில் பிரமாண்ட பசுமை துறைமுகம்
விரைவில் பணியை தொடங்குகிறது தமிழ்நாடு கடல்சார் வாரியம்
நடிகர் விஜய் விருந்து சினிமா சூட்டிங்கா?
விவசாயிகளுக்கு நடிகர் விஜய் விருந்து கொடுத்தது சினிமா சூட்டிங்கா? என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த திமுக அரசின் திட்டங்களால் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த திமுக அரசின் திட்டங்களால் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
'போன் பே' உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவித மோசடி
போன் பே உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவகை பண மோசடி நடந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு என்பது தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது என சபாநாயகர் அப்பாவு காட்டமாக கூறினார்.