100 போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது இஸ்ரேல் குண்டு மழை
Dinakaran Chennai|October 27, 2024
ஈரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து 100 போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கூறி உள்ளது.
100 போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது இஸ்ரேல் குண்டு மழை

கடந்த 1979ம் ஆண்டில் ஈரானிய புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்தே ஈரானும், இஸ்ரேலும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றன. இஸ்ரேலை அழிக்க வேண்டுமென ஈரான் நாட்டு தலைவர்கள் வெளிப்படையாக பேசினர்.

அதோடு, இஸ்ரேலுக்கு எதிரான போராளி குழுக்களை ஈரான் ஆதரித்தது. இதனால் ஈரானை எப்போதுமே தனது அச்சுறுத்தலாகவே கருதிய இஸ்ரேல் நிழல் உலக யுத்தத்தை நடத்தியது. ஈரான் அணு விஞ்ஞானிகளை கடத்தி கொலை செய்தது. ஈரான் அணுசக்தி மையங்களை ஹேக் செய்து நாசப்படுத்தியது. பல ஆண்டாக நடந்த இந்த நிழல் யுத்தம், கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் புகுந்து கொடூரத தாக்குதல் நடத்தியதால் காசா மீது இஸ்ரேல் படையெடுத்ததில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது. காசாவின் ஹமாஸ் போராளிகளும், லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளும் ஈரானின் ஆதரவில் செயல்படுபவர்கள்.

ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்ததும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலை தாக்கத் தொடங்கியது. இதனால் ஒரே நேரத்தில் காசா, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. அதோடு ஈரானையும் மறைமுகமாக பழிவாங்கியது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், ஏப்ரல் 13ம் தேதி 300 ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது. இது இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் வெளிப்படையாக நடத்திய முதல் தாக்குதல்.

இதற்காக ஈரானை நேரடியாக தாக்காத இஸ்ரேல், ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்களை பழிவாங்கியது. கடந்த ஜூலை 31ல் ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றிருந்த ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவை வான்வழி தாக்குதல் நடத்தி கொன்றது. கடந்த செப்டம்பரில், லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகள் மீது வான்வழி தாக்குதலை தீவிரமாக்கி ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவையும் படுகொலை செய்தது. தரைவழியாகவும் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது.

This story is from the October 27, 2024 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the October 27, 2024 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAKARAN CHENNAIView All
எஸ்சி, எஸ்டி, ஓபிசி வளர்ச்சியை மோடி, ஆர்எஸ்எஸ் தடுக்கிறார்கள்
Dinakaran Chennai

எஸ்சி, எஸ்டி, ஓபிசி வளர்ச்சியை மோடி, ஆர்எஸ்எஸ் தடுக்கிறார்கள்

ராகுல்காந்தி குற்றச்சாட்டு

time-read
1 min  |
November 27, 2024
13 வயது சிறுவனுக்கு ₹1.10 கோடி
Dinakaran Chennai

13 வயது சிறுவனுக்கு ₹1.10 கோடி

பண்ணை நிலத்தை விற்று கிரிக்கெட் ஆட வைத்த தந்தை

time-read
1 min  |
November 27, 2024
காதலருடன் டிசம்பர் 11ல் திருமணம் மதம் மாறுகிறார்? கீர்த்தி சுரேஷ்
Dinakaran Chennai

காதலருடன் டிசம்பர் 11ல் திருமணம் மதம் மாறுகிறார்? கீர்த்தி சுரேஷ்

காதலரை வரும் டிசம்பரில் திருமணம் செய்வதால் நடிகை கீர்த்தி சுரேஷ் மதம் மாற உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது.

time-read
1 min  |
November 27, 2024
Dinakaran Chennai

அதி கனமழை எச்சரிக்கை டெல்டா மாவட்டங்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

time-read
1 min  |
November 27, 2024
ஒகேனக்கல் அருவி பகுதி உள்பட 7 சுற்றுலா தலங்கள் திறப்பு
Dinakaran Chennai

ஒகேனக்கல் அருவி பகுதி உள்பட 7 சுற்றுலா தலங்கள் திறப்பு

₹27.34 கோடியில் மேம்படுத்தப்பட்ட

time-read
1 min  |
November 27, 2024
Dinakaran Chennai

மணிப்பூரில் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த நபர் மாயம்

குகி ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணிக்கு சென்றவர்

time-read
1 min  |
November 27, 2024
தரமற்ற பொருளை திரும்பப்பெற மறுப்பு வாடிக்கையாளருக்கு பிளிப்கார்ட் 710,000 இழப்பீடு வழங்க வேண்டும்
Dinakaran Chennai

தரமற்ற பொருளை திரும்பப்பெற மறுப்பு வாடிக்கையாளருக்கு பிளிப்கார்ட் 710,000 இழப்பீடு வழங்க வேண்டும்

நுகர்வோர் ஆணையம் உத்தரவு

time-read
1 min  |
November 27, 2024
‘வித்யாலட்சுமி’ கல்விக் கடன் திட்டம் விரிவுபடுத்தப்படுமா?
Dinakaran Chennai

‘வித்யாலட்சுமி’ கல்விக் கடன் திட்டம் விரிவுபடுத்தப்படுமா?

ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில்

time-read
1 min  |
November 27, 2024
Dinakaran Chennai

துணைவேந்தர் நியமனத்தில் தமிழக ஆளுநரால் இடர்பாடு

உயர்கல்வித்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

time-read
1 min  |
November 27, 2024
நாதகவில் இருந்து விலகியவர்கள் சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு
Dinakaran Chennai

நாதகவில் இருந்து விலகியவர்கள் சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு

'13 ஆண்டுகளில் சொத்துக்களை தான் இழந்துள்ளோம்’

time-read
1 min  |
November 27, 2024