நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசு, துணி, இனிப்பு, எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்கள் வியாபாரம் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் இருந்ததால் வியாபாரிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீபாவளிக்கு நாடு முழுவதும் சுமார் ரூ.4 லட்சம் கோடிக்கு விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் (வியாழன்) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலையில் எழுந்து, குளித்து புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபட்டனர்.
பின்னர் உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இதை தொடர்ந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அதிகாலை முதல் இரவு வரை போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொருவரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். குறிப்பாக, இந்த தீபாவளி பண்டிகைக்கு பகலில் வெடிக்கும் வெடியை விட இரவு நேரத்தில் வெடிக்கும் ராக்கெட், புஸ்வானம் மற்றும் வானில் வர்ணஜாலம் காட்டும் வெடிகள் அதிகளவில் வெடிக்கப்பட்டது.
சென்னையில் இதுபோன்ற பட்டாசுகள் வெடிக்கும்போது, இரவை பகலாக்கும் அளவுக்கு வானத்தில் பட்டாசு வர்ணஜாலம் காட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது. சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மழை இல்லாமல் இருந்தது பட்டாசு பிரியர்களை மட்டுமல்லாது, வியாபாரிகளையும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி, ஆங்காங்கே பட்டாசு விற்பனைக்காக தனி கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இவர்கள் சிவகாசியில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்து இங்கு விற்பனை செய்தனர். அதேநேரம், சிவகாசியில் இருந்தும் வியாபாரிகள் பலரும் நேரடியாக சென்னை, கோவை உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு வந்து தள்ளுபடி விற்பனையில் பட்டாசுகளை விற்பனை செய்து அசத்தினர். நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை வானம் தெளிவாக இருந்ததால் பொதுமக்களும் ஆர்வமுடன் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
Denne historien er fra November 02, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 02, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
அதி கனமழை எச்சரிக்கை டெல்டா மாவட்டங்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒகேனக்கல் அருவி பகுதி உள்பட 7 சுற்றுலா தலங்கள் திறப்பு
₹27.34 கோடியில் மேம்படுத்தப்பட்ட
மணிப்பூரில் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த நபர் மாயம்
குகி ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணிக்கு சென்றவர்
தரமற்ற பொருளை திரும்பப்பெற மறுப்பு வாடிக்கையாளருக்கு பிளிப்கார்ட் 710,000 இழப்பீடு வழங்க வேண்டும்
நுகர்வோர் ஆணையம் உத்தரவு
‘வித்யாலட்சுமி’ கல்விக் கடன் திட்டம் விரிவுபடுத்தப்படுமா?
ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில்
துணைவேந்தர் நியமனத்தில் தமிழக ஆளுநரால் இடர்பாடு
உயர்கல்வித்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
நாதகவில் இருந்து விலகியவர்கள் சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு
'13 ஆண்டுகளில் சொத்துக்களை தான் இழந்துள்ளோம்’
டெல்டாவில் கனமழை: 2 லட்சம் மீனவர்கள் முடக்கம்
புதுச்சேரி, 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
11 மாவட்டங்களில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம்
கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள
நடிகர் பார்த்திபனுக்கு திடீர் ஆசை நானும் ஒருநாள் கட்சி ஆரம்பிப்பேன்
அரசியலில் பயங்கர ஈடுபாடு உள்ளதாக பேட்டி