விருதுநகர், நவ. 11: பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என்று விருதுநகரில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் சென்றார். அன்று பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆய்வு செய்த முதல்வர், தான் வாங்கி வந்த கேக், பிஸ்கட் மற்றும் பழங்களை அவர்களுக்கு வழங்கினார். இதனால் நெகிழ்ச்சியடைந்த மாணவிகள், முதல்வரை அப்பா என்று அழைத்து மகிழ்ந்தனர்
இதையடுத்து, விருதுநகரில் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கோவை, விருதுநகர் கள ஆய்வில் ஒரே நாளில் கோரிக்கை நிறைவேற்றம்
விருதுநகரில் நேற்று முன்தினம் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தொழிலாளர்களிடம் குறை கேட்டறிந்தார். அப்போது பெண் தொழிலாளர்கள் சிலர், பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தால், 'அவர்களது குழந்தைகளின் படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.
இதையேற்று விருதுநகரில் நேற்று நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்' என்று அறிவித்தார். கோரிக்கை வைத்த ஒரே நாளில் முதல்வர் அறிவிப்பை வெளியிட்டதற்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
This story is from the November 11, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 11, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தொடர் கனமழையால் மரம் விழுந்து சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்
கே.பேட்டையில் பெய்த கனமழையால், மரம் விழுந்ததில் சார் பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சு வர் இடிந்து சேதமடைந்தது.
பேச மறுத்ததால் விரக்தி காதலி வீட்டில் காதலன் தற்கொலை முயற்சி
காதலி பேச மறுத்ததால், அவரது வீட்டிற்கு சென்று காதலன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு
பிச்சாட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 2,200 கனஅடி நீர் திறப்பால் ஆரணியாற்றில் வெள்ளம்
கரைகளை எம்எல்ஏ ஆய்வு
பெஞ்சல் புயல் காரணமாக கன மழை கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 தரைப்பாலங்கள் பலத்த சேதம்
15க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு
கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் 2 அடிக்கு மேல் தேங்கியிருந்த மழைநீர் இரவோடு இரவாக அகற்றம்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி
சிங்கபெருமாள்கோவில் - பாலூர் இடையே தண்ணீரில் மூழ்கிய தரைபாலம்
தொடர் கன மழை எதி ரொலி காரணமாக சிங்கபெருமாள் கோ வில் - பாலூர் இடையே தரைபாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
162 கோடியில் சீரமைக்கப்பட்டு வரும் மதுராந்தகம் ஏரியை எம்எல்ஏ ஆய்வு
பெஞ்சல் எதிரொலியாக மதுராந்தகம் ஏரியை க.சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
பெஞ்சல் புயலில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து நாசம்
பரிதவித்து வரும் விவசாயிகள்
தொடர் மழையால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்
பெஞ்சல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில், தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.