தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
அந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்து வருவதால், மழை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
மேலும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் வாய்ப்புள்ளது. அது அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தமிழக-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது. இது தவிர 13ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
This story is from the November 11, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 11, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தொடர் கனமழையால் மரம் விழுந்து சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்
கே.பேட்டையில் பெய்த கனமழையால், மரம் விழுந்ததில் சார் பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சு வர் இடிந்து சேதமடைந்தது.
பேச மறுத்ததால் விரக்தி காதலி வீட்டில் காதலன் தற்கொலை முயற்சி
காதலி பேச மறுத்ததால், அவரது வீட்டிற்கு சென்று காதலன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு
பிச்சாட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 2,200 கனஅடி நீர் திறப்பால் ஆரணியாற்றில் வெள்ளம்
கரைகளை எம்எல்ஏ ஆய்வு
பெஞ்சல் புயல் காரணமாக கன மழை கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 தரைப்பாலங்கள் பலத்த சேதம்
15க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு
கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் 2 அடிக்கு மேல் தேங்கியிருந்த மழைநீர் இரவோடு இரவாக அகற்றம்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி
சிங்கபெருமாள்கோவில் - பாலூர் இடையே தண்ணீரில் மூழ்கிய தரைபாலம்
தொடர் கன மழை எதி ரொலி காரணமாக சிங்கபெருமாள் கோ வில் - பாலூர் இடையே தரைபாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
162 கோடியில் சீரமைக்கப்பட்டு வரும் மதுராந்தகம் ஏரியை எம்எல்ஏ ஆய்வு
பெஞ்சல் எதிரொலியாக மதுராந்தகம் ஏரியை க.சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
பெஞ்சல் புயலில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து நாசம்
பரிதவித்து வரும் விவசாயிகள்
தொடர் மழையால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்
பெஞ்சல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில், தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.