சென்னையில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட பிறகு நிருபர்களை சந்தித்து பேசியதாவது:
வங்கக்கடலில் உருவாகியிருந்த பெஞ்சல் புயல் காரணமாக நேற்று சென்னையில் கனமழை பெய்தது. கனமழை பெய்தாலும் நம்முடைய அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவும், தூர்வாரும் பணிகளின் காரணமாகவும், பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். உங்களில் பல தொலைக்காட்சிகளிலும் இதைப் பற்றிப் பாராட்டி சொல்லியிருக்கின்றீர்கள்.
வட சென்னை பகுதிகளில் மழைநீரை அகற்றுவதற்கு ராட்சத மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு மழைநீர் அகற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து சில இடங்களில் அந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், மழைநீர் தேங்கும் இடங்களில் அதனை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,686 மோட்டார் பம்புகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன. தேங்கிய இடங்களில் உடனுக்குடன் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் 21 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. கணேசபுரம் சுரங்கப் பாதை ரயில்வே மேம்பாலப்பணி காரணமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 32 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 1,018 நபர்கள் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பொதுமக்களுக்கு 9 லட்சத்து 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 30ம் தேதி அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று நான் அறிவித்திருந்தேன். அந்த அடிப்படையில், 386 அம்மா உணவகங்களில் 1,07,047 பேருக்கு உணவு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
This story is from the December 02, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 02, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
திருவாலங்காடு ஒன்றியத்தில் நீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர்
திருவாலங்காடு பகுதியில், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் கன மழை காரணமாக நீரில் மூழ்கியது.
ஊரப்பாக்கம் -கூடுவாஞ்சேரி வரை 8 வழி சாலை அமைக்க வேண்டும்
ஊரப்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 8 வழி சாலை அமைக்க கோரி அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
காட்டாங்கொளத்தூரில் கஞ்சா ஆயில் விற்ற கல்லூரி மாணவர்கள் இருவர் பிடிபட்டனர்
முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு, செல்போன் செயலி மூலம் போதைப் பொருள் விற்பனை செய்த, கல்லூரி மாணவர்கள் 5 பேரை, கடந்த மாதம் 4ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தி ஊராட்சியில் மருத்துவ முகாம்
மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓரத்தி ஊராட்சியில் தாழ்வான பகுதியில் வீடுகள் கட்டியிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீதாததேசிகன் சாற்றுமுறை உற்சவம் வரதராஜ பெருமாள், தாயாருக்கு ரத்ன அங்கி சேவை
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் ஸ்ரீதாததேசிகன் சாற்றுமுறை உற்சவத்தை யொட்டி உற்சவர் வரதராஜப்பெருமாளும், பெருந்தேவித்தாயாரும் ரத்ன அங்கி அணிந்து நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று போய் நாளை வாருங்கள் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆண்டு கணக்கில் தேங்கும் பைல்கள்
தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆண்டு கணக்கில் பைல்கள் தேங்குவதாகவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெஞ்சல் புயலால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிய கிராமங்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின.
கல்பாக்கம் அருகே மரம் விழுந்து முதியவர் வீடு சேதம்
கல்பாக்கம் அருகே மரம் விழுந்ததில் முதியவரின் வீடு முழுமையாக சேதமடைந்தது. இதில், அவரது மாட்டின் கொம்பு உடைந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்தது.
மாமல்லபுரத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணா மண்டபத்தில் படிந்த தூசிகள் அகற்றும் பணி தீவிரம்
மாமல்லபுரத்தை கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை கல் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை பாறைகளை குடைந்து அழகுறச் செதுக்கினர்.
ஒடிசாவில் இருந்து கடத்திய 20 கிலோ கஞ்சா பறிமுதல்
வெளி மாநிலத்தில் இருந்து ரயிலில் பெரம்பூர் வழியாக, சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, அண்ணாநகர் மதுவிலக்கு போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.