திமுக பிரமுகர் இடிமுரசு இளங்கோ கொலை உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்த ஏ கேட்டகிரி ரவுடி அறிவழகனை ஓட்டேரியில் பிடிக்க முயன்ற போது, போலீசாரை நோக்கி கள்ளத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்ற போது, உதவி ஆய்வாளர் தற்பாதுகாப்புக்காக அவரை சுட்டு பிடித்தார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்ற பிறகு ரவுடிகளின் நடமாட்டம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக எடுத்த கடுமையான நடவடிக்கையால் ஏ பிளஸ் மற்றும் ஏ கேட்டகிரி ரவுடிகள் பலர் சென்னையை விட்டு ஆந்திரா, கர்நாடகாவுக்கு தப்பி ஓடிவிட்டனர். இருந்தாலும், தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்யும் வகையில் புதிதாக சென்னை பெருநகர காவல்துறையில் ‘ரவுடிகள் ஒழிப்பு பிரிவு’ என்று உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் தனிப்பிரிவு தொடங்கி கமிஷனர் அருண் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ரவுடிகள் ஒழிப்பு பிரிவின் தனிப்படையினர் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் முகாமிட்டு கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றதால் பிடியாணை வழங்கப்பட்டு தொடர்ந்து தலைமறைவாக உள்ள ரவுடிகளை வேட்டையாடி வருகின்றனர். அந்த வகையில், சென்னை ஓட்டேரியை சேர்ந்த ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:
சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி 5வது தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் ஹரி(எ)அறிவழகன் (24). இவர் மீது 2013ம் ஆண்டு திமுக பிரமுகர் இடிமுரசு இளங்கோவை கொலை செய்த வழக்கு, 2017ம் ஆண்டு வியாசர்பாடி பகுதியில் இடிமுரசு இளங்கோவின் தம்பி மகன் பழனியை கொலை செய்த வழக்கு, சோழவரத்தில் திவாகர் என்பவரை கொலை செய்த வழக்கு உள்பட 3 கொலை வழக்குகள் உள்ளது. இதுதவிர, சோழவரம், மீஞ்சூர் மற்றும் திருத்தணி காவல்நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
This story is from the December 10, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 10, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இதய ஆரோக்கியத்தை வலியுறுத்தி தொழிற்சாலைகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள்
டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
குடியரசு தினத்தை முன்னிட்டு 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
குடியரசு தினவிழா ஒத்திகையை முன்னிட்டு, நாளை, 22, 24, 26 ஆகிய 4 நாட்களில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை போக்குவரத்து தடை செய்யப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
எண்ணூர் கடற்கரையை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்
பொதுமக்கள் கோரிக்கை
சாலை விபத்தில் படுகாயமடைந்த முதியவருக்கு சிகிச்சை அளித்து குடும்பத்துடன் சேர்த்து வைப்பு
சென்னை காவல்துறையில் 21.04.2021 அன்று 'காவல் கரங்கள்' உதவி மையம், 9444717100 என்ற உதவி எண்ணுடன் (24×7) ஆரம்பிக்கப்பட்டு, சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு 'மனிதம் போற்றுவோம் மனித நேயம் காப்போம்,' என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சேவை பணியாற்றி வருகின்றனர்.
கோயம்பேடு பகுதியில் இருந்து ஆந்திரா செல்லும் வழியில் பன்னீர்செல்வத்தை கொன்று எரித்தோம்
பிரபல ரவுடி பாம் சரவணன் வாக்குமூலம்
அமெரிக்க அதிபராக நாளை பதவியேற்பு தலைநகர் வாஷிங்டனுக்கு டிரம்ப் வருகை
வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆதரவு
ஏகனாபுரத்தில், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை தவெக தலைவர் விஜய் நாளை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார்.
விண்ணில் இரு செயற்கை கோள்கள் இணைப்பு விண்வெளி ஆய்வு மையம் அமைக்க உதவியாக இருக்கும்
இஸ்ரோ குழுவில் இடம்பெற்ற கோவை விஞ்ஞானி பேட்டி
டாஸ்மாக் பாரில் தகராறு மாற்றுத்திறனாளி மண்டை உடைப்பு
பெரம்பூர் டீத் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த் குமார் (38). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று முன் தினம் இரவு, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளார்.
ஆஸி ஓபன் டென்னிஸ் நான்காவது சுற்றில் பாரியா, ரைபாகினா
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் மெல்போர்ன் நகரில் நடக்கிறது.