தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று கள ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, 2 நாள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு முதல்வர் நேற்று முன்தினம் வந்தார். முதல் நிகழ்ச்சியாக கடந்த 2021 ஆகஸ்ட் 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து நேற்று முன்தினம் கள ஆய்வு ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சனாபுரம் கிராமத்தில் நடந்தது.
அப்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2 கோடியாவது பயனாளியான நஞ்சனாபுரத்தை சேர்ந்த ராமநாதன் மனைவி சுந்தராம்பாள் (58) என்பவரது வீட்டுக்கு சென்று மருந்து பெட்டகத்தை வழங்கினார். தொடர்ந்து இத்திட்டத்தின் 2 கோடியே ஒன்றாவது பயனாளியான நஞ்சனாபுரத்தை சேர்ந்த காளியப்பன் மனைவி வசந்தா (60) என்பவரது வீட்டுக்கு சென்று அவரது உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, பிச்சாண்டம்பாளையத்தில் உள்ள விசைத்தறி கூடத்திற்கு சென்று அங்கு தொழில் நிலவரம் குறித்தும், இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாக உயர்த்தியதன் பயன் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அதற்கான அரசின் முயற்சி குறித்து விளக்கி கூறினார்.
இதையடுத்து, ஈரோடு மேட்டுக்கடை தங்கம் மகாலில் நடந்த திமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய களப்பணி குறித்தும், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வியூகம் வகுத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட அதிகாரிகளுடன் அரசின் திட்டங்கள் செயல்படுத்தியது தொடர்பாக முதல்வர் ஆய்வு கூட்டம் நடத்தினார். 2வது நாள் நிகழ்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ஈரோடு அடுத்த சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று காலை நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
Denne historien er fra December 21, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 21, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்
பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இன்று குவைத் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். மோடி 3ம் முறையாக பதவியேற்ற பிறகு பல்வேறு நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன போயிங் விமானத்தை மீண்டும் தேட முடிவு
காணாமல் போன மலேசிய விமானத்தை மீண்டும் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என மலேசிய அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
ஆயுள்,மருத்துவ காப்பீடுகள் மீதான வரி குறைக்கப்படுமா?
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களின் மீதான வரியை குறைப்பது பற்றி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இன்று முடிவு எடுக்கப்பட உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டுக்குழு தலைவராக பாஜ எம்பி நியமனம்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார்.
ஆந்திராவில் பயங்கரம் வீட்டுக்கு வந்த பார்சலில் அமுகிய ஆண் சடலம்
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வீட்டுக்கு வந்த பார்சலில் அழுகிய ஆண் சடலம் இருந்தது. இதுதொடர்பாக எஸ்பி நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
டி20 தொடரை வென்ற வங்கதேசம் பழிக்கு பழி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபாரமாக வெற்றி பெற்ற வங்கதேசம், அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றி உள்ளது.
நயன்தாராவுக்கு பணத் திமிர் பாடகி சுசித்ரா கடும் தாக்கு
சமீபத்தில் நயன்தாரா யூடியூபிற்கு பேட்டி அளித்தார். அது தொடர்பாக பாடகியும் நடிகையுமான சுசித்ரா கூறியிருப்பதாவது:
நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலையான சம்பவம் தொடர்பாக அறிக்கை
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் திருநாளை அவமதிக்கும் ஒன்றிய பாஜ அரசு யுஜிசி-நெட் தேர்வு அட்டவணையை மாற்றா விட்டால் போராட்டம்
பொங்கல் திருநாளை அவமதிக்கும் வகையில் ஒன்றிய பாஜ அரசு செயல்படுகிறது. அன்றைய தினம் நடைபெற உள்ள யுஜிசி – நெட் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும்.
கவுன்சிலர் கொலைக்கு பழிதீர்த்த கும்பல் நெல்லை நீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டிக் கொலை
நெல்லை மாவட்ட நீதிமன்ற நுழைவாயிலில் ஒரு கும்பல் பழிக்குப்பழியாக வாலிபரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பியது.