இதை கட்சித் தலைவர் அன்புமணி ஏற்கவில்லை. பொதுக்குழு கூட்ட மேடையிலேயே இதுதொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் வார்த்தைப் போர் வெடித்தது. இதனால் பாமகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு, பரபரப்பு நிலவுகிறது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டம் துவக்கத்தின்போது மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இறப்பிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்சியின் தலைவர் அன்புமணி பேசும்போது, 2025ம் ஆண்டு நாம் அர்ப்பணிப்போடு பணியாற்றினால் 2026ம் தேர்தலில் வெற்றி பெறுவோம். 2019ம் ஆண்டு நாம் எடுத்த தவறான முடிவால் மீண்டு வரமுடியவில்லை. 2026ம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான். அக்கூட்டணியில் பாமக இருக்கும். பேனரில் அய்யா படம் மட்டும் போடுங்கள். என் படம் உள்பட யார் படமும் போடவேண்டாம். இதற்காக கட்சியில் குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்றார். அதை தொடர்ந்து பொதுக்குழுவில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்புமணி பேசி முடித்ததும். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசத்தொடங்கினார். அவர் பேசும்போது, பாமகவின் மாநில இளைஞர் அணித் தலைவர் முகுந்தன் என்று அறிவித்ததோடு அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். முகுந்தன் மாநில இளைஞர் அணி தலைவர் பொறுப்பை ஏற்று அன்புமணிக்கு உதவியாக…என்று கூறிக்கொண்டிருக்கும்போது, உடனே குறுக்கிட்ட அன்புமணி, மேடையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ‘கட்சியில் 4 மாதத்திற்கு முன்புதான் முகுந்தன் வந்திருக்கிறார். அவருக்கு இளைஞர் அணி என்றால் என்ன தெரியும்.. அனுபவம் எப்படி இருக்கும்.
This story is from the December 29, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 29, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பாராபேட்மிண்டனில் 2028ல் தங்கம் வெல்வேன்
அர்ஜூனா விருது பெற்ற வீராங்கனை மனிஷா உறுதி
திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில் கறி விருந்து
திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில், உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
திருவள்ளூர் அடுத்த பட்டரை பெரும்புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இணைந்து தேசிய நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்க விழா நடைபெற்றது.
நேருவை கொச்சைப்படுத்தி பேச்சு பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும்
மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார்
அதிமுக ஆட்சியில் சிறை துறைக்கு உபகரணம் வாங்கியதில் ₹100 கோடி முறைகேடு 11 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு
உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கின
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் பார்வையாளர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியலை பார்வையாளர் ஆய்வு நடத்தினார்.
நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்புக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
போலீசாருடன் தள்ளுமுள்ளு திருத்தணியில் பெரும் பரபரப்பு
கேளம்பாக்கம் தனபாலன் கல்லூரியில் மு.க.ஸ்டாலின் பெயரில் அரங்கம் திறப்பு பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்வை வளமாக்கும் திமுக அரசு
கேளம்பாக்கம் தனபாலன் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் புதியதாக அமைக்கப்பட்ட அரங்கத்திறப்பு விழாவில் 'பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அடித்தட்டு மக்களின் வாழ்வை திமுக அரசு வளமாக்கி வருகிறது' என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
செல்போன் கடையில் கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது
ஸ்ரீபெரும்புதூரில் செல் போன் கடையின் பூட்டை உடைத்து, செல்போன்களை கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி 3 வழிப்பாதையாக மாற்றியதால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வரவேற்பு