அண்ணா பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி டிசம்பர் 23ம் தேதி ஞானசேகரன் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் வரலட்சுமி எழுதிய கடிதத்தில், இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளது.
அதனால் வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக விடுமுறைகால நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயண் ஆகியோர் அறிவித்தனர். இதை தொடர்ந்து பாஜக வழக்கறிஞர் அ.மோகன்தாஸ் தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த சம்பவம் குறித்து காவல்துறையும், அண்ணா பல்கலைக்கழகமும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் வாதிடும்போது, ‘சம்பவம் நடந்தது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அருண் அளித்த பேட்டியில், இதுவரையில் நடைபெற்ற விசாரணையில் ஒருவர் குற்றவாளி என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றுதான் தெரிவித்துள்ளார். மீடியாக்கள் பிரச்னையை பெரிதுபடுத்தியதால் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அவர் பேட்டியளித்துள்ளார்.
This story is from the December 29, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 29, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பாராபேட்மிண்டனில் 2028ல் தங்கம் வெல்வேன்
அர்ஜூனா விருது பெற்ற வீராங்கனை மனிஷா உறுதி
திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில் கறி விருந்து
திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில், உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
திருவள்ளூர் அடுத்த பட்டரை பெரும்புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இணைந்து தேசிய நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்க விழா நடைபெற்றது.
நேருவை கொச்சைப்படுத்தி பேச்சு பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும்
மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார்
அதிமுக ஆட்சியில் சிறை துறைக்கு உபகரணம் வாங்கியதில் ₹100 கோடி முறைகேடு 11 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு
உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கின
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் பார்வையாளர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியலை பார்வையாளர் ஆய்வு நடத்தினார்.
நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்புக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
போலீசாருடன் தள்ளுமுள்ளு திருத்தணியில் பெரும் பரபரப்பு
கேளம்பாக்கம் தனபாலன் கல்லூரியில் மு.க.ஸ்டாலின் பெயரில் அரங்கம் திறப்பு பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்வை வளமாக்கும் திமுக அரசு
கேளம்பாக்கம் தனபாலன் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் புதியதாக அமைக்கப்பட்ட அரங்கத்திறப்பு விழாவில் 'பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அடித்தட்டு மக்களின் வாழ்வை திமுக அரசு வளமாக்கி வருகிறது' என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
செல்போன் கடையில் கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது
ஸ்ரீபெரும்புதூரில் செல் போன் கடையின் பூட்டை உடைத்து, செல்போன்களை கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி 3 வழிப்பாதையாக மாற்றியதால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வரவேற்பு