தீவிரவாதிகள் கைவரிசையா என எப்பிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்தாண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மாபெரும் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் வரும் 20ம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் திடீரென அமெரிக்காவில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடப்பது அதிகரித்துள்ளன. அமெரிக்காவை பொறுத்தவரை பள்ளி, கல்லூரி, வணிக வளாகம், பூங்காக்கள் உள்பட பல்வேறு இடங்களில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாக உள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகணம் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் கடந்த 31ம் தேதி நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. இங்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மிகவும் பிரபலமான போர்பன் என்ற சாலையில் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கும் விதமாக மக்கள் கூடியிருந்தனர்.
மேலும் அருகே சூப்பர்டோம் என்ற இடத்தில் நடக்கும் கால்பந்து போட்டியை காணவும் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். அப்போது அதிவேகமாக காரை ஓட்டி வந்த நபர் ஒருவர் அங்கு குழுமியிருந்த மக்களை சுட்டு கொண்டே, மக்கள் மீது காரை வேகமாக மோதினார். பின்னர் அந்த நபர் காரை விட்டு இறங்கி அங்கிருந்த காவல்துறையினரையும் துப்பாக்கியால் சுட்டார். காவல்துறை பதிலுக்கு நடத்திய துப்பாக்கி சூட்டில் காரை ஓட்டி வந்த மர்ம நபர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்த எப்பிஐயின் முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் 42 வயதான ஷம்சுதின் ஜபார் என்பதும், இவர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த 2009 முதல் 2010 வரை ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் என தெரிய வந்துள்ளது.
هذه القصة مأخوذة من طبعة January 03, 2025 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة January 03, 2025 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நாகூர் அருகே படகு திடீர் பழுது கடலில் தத்தளித்த 9 மீனவர்கள் மாயம்
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்தவர் செல்வமணி (42). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்பட புதுக்கோட்டை, வானமாதேவியை சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 29ம் தேதி அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை கல்லூரி முதல்வரிடம் விசாரணை
திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் இயங்கி வரும் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் பி.ஏ. 2ம் ஆண்டு மாணவி, கடந்த ஜூலை 30ம் தேதி பெற்றோருடன் வந்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மாற்று சான்றிதழை வழங்குமாறும் கேட்டு முதல்வர் ராஜாராமனிடம் விண்ணப்பித்துள்ளார்.
தியாகராஜ சுவாமி கோயிலில் ஏப்.7ல் ஆழித்தேரோட்டம்
தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 7ந் தேதி நடக்கிறது.
தமிழ்நாட்டில் அரசியல் நாடகம் நடத்தும் அண்ணாமலை மணிப்பூருக்கு சென்று சவுக்கால் அடிப்பாரா?
பாஜ தலைவர் அண்ணாமலை மணிப்பூரில் சென்று சவுக்கால் அடித்துக்கொள்வாரா? என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை அருகே இந்த ஆண்டில் நடந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு 800 காளைகள், 300 வீரர் பங்கேற்பு
தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
பட்டாசு ஆலைகளின் விபத்துகளை நிரந்தரமாக தடுக்க வேண்டும்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு குழு
தனியார் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஜனவரி 10ம் தேதி திருச்சியில் கூட்டுகிறது.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களுக்கு இன்று காலை முன்பதிவு
பொங்கலை முன்னிட்டு 5 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு ₹500 கோடியில் நவீன வாகனங்கள்
குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற 500 கோடியில் வழங்கப்பட்டுள்ள நவீன வாகனங்களின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னையில் தி.மு.க. மாணவர் அணி மாவட்ட. மாநில அமைப்பாளர் கூட்டம்
திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. நேற்று வெளியிட்ட அறிவிப்பு: