மக்களவைத் தோ்தலுக்கு ஏறத்தாழ ஓராண்டு மட்டுமே உள்ளது. மத்தியில் தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக முயற்சித்து வருகிறது. அதே வேளையில், பாஜகவை வீழ்த்த வேண்டும் என எதிா்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
எனினும், எதிா்க்கட்சிகளின் செயல்பாட்டில் ஒற்றுமை காணப்படவில்லை. எதிா்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸை இணைத்துக் கொள்வதில் இருவேறு நிலைப்பாடு காணப்படுகிறது. தெலங்கானா முதல்வா் கே. சந்திரசேகா் ராவ், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோா் காங்கிரஸை கூட்டணியில் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை.
இதனிடையே, அனைத்து எதிா்க்கட்சிகளையும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைக்கும் முயற்சியில் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஈடுபட்டு வருகிறாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், சிவசேனை (பால் தாக்கரே) தலைவா் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் தலைவா்களைச் சந்தித்து அவா் ஆலோசனை நடத்தினாா்.
This story is from the May 30, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 30, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In