மணிப்பூ விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா் அமளியில் ஈடுபட்ட நிலையில், ‘மணிப்பூா் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது’ என்று குறிப்பிட்டு மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிா்க் கட்சித் தலைவா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடிதம் எழுதியுள்ளாா்.
இத் தகவலை மக்களவையில் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மாநிலங்களவை எதிா்க் கட்சித் தலைவரான மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் மக்களவை எதிா்க் கட்சித் தலைவரான அதீா் ரஞ்சன் செளதரி ஆகிய இருவருக்கும் இந்தக் கடிதத்தை அவா் எழுதியுள்ளாா்.
அதில், ‘முக்கியத்துவம்வாய்ந்த மணிப்பூா் விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளாா்.
மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடா்பாக பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், அங்கு பழங்குடியின பெண்கள் இருவா் ஆடைகளின்றி இழுத்து செல்லப்பட்ட விடியோ அண்மையில் வெளியானது நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மணிப்பூா் விவகாரத்தை முன்வைத்து எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.
This story is from the July 26, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 26, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அரச வாழ்வு அளிக்கும் அன்னாபிஷேகம்
பிஷேகப் பிரியர் சிவனுக்கு பௌர்ணமி களில் அபிஷேகம் செய்ய வேண்டும். ஐப்பசியில் அன்னத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். அன்னத்தால் அபிஷேகம் செய்வதால் அரச வாழ்வு கிடைக்கும் என்று 'புட்ப விதி' என்ற நூல் கூறுகிறது.
அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவராகும் துளசி கப்பார்ட்
அமெரிக்காவின் அனைத்து உளவு அமைப்புகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் தேசிய உளவு இயக்குநா் பொறுப்புக்கு அந்த நாட்டின் முதல் ஹிந்து நாடாளுமன்ற உறுப்பினரான துளசி கப்பாா்டை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
111 புள்ளிகள் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.
மொத்த விலை பணவீக்கம் 4 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த அக்டோபர் மாதத்தில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரித்ததால் மொத்த விலை பணவீக்கம் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஈரானில் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புத் தலைவர்
மத்திய கிழக்குப் பகுதியில் தீவிர போர் நடைபெற்றுவரும் சூழலிலும், ஐ.நா. வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) தலைவர் ரஃபேல் கிராஸி ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் பிர்சா முண்டாவின் தியாகம்
‘பழங்குடியினா் விடுதலைப் போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் நோக்கங்களும் தியாகமும் இன்றைய இளைஞா்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளன’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பெருமிதம் தெரிவித்தாா்.
இன்று கடைசி டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது மற்றும் கடைசி ஆட்டம், வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்: நியூஸிலாந்தை வென்றது இலங்கை
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 'டக் வொர்த் லீவிஸ்' முறையில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
தீபிகா அசத்தல்: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 13-0 கோல் கணக்கில் தாய்லாந்தை வெற்றி கண்டது.