உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து ராகுல் காந்திக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை திங்கள்கிழமைரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் 4 மாதங்களுக்கு பிறகு அவர் மீண்டும் எம்.பி.யான நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்றார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், 'எப்படி அனைத்துத் திருடர்களும் மோடி என்ற பொதுவான துணைப் பெயரைக் கொண்டுள்ளனர்?' என்றார். அவரது பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தியதாகக் கூறி குஜராத் பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக சிறைத் தண்டனை பெற்றவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது என்ற மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து மக்களவைச் செயலகம் நடவடிக்கை மேற்கொண் சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த அமர்வு நீதிமன்றம், ராகுலுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்குத் தடை விதிக்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
This story is from the August 08, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 08, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சாட்: 96 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்
மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாட் நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
புதினுடன் டிரம்ப் பேச்சு?: ரஷியா மறுப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் வலியுறுத்தியதாக வாஷிங்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது.
கரூர் வைஸ்யா வங்கியின் 850-ஆவது கிளை திறப்பு
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்தது.
ஜப்பான் பிரதமராக மீண்டும் ஷிகெரு இஷிபா
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி
பேஜர் தாக்குதல்: நெதன்யாகு ஒப்புதல்
லெபனானில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
சேலஞ்சர்ஸில் வாகை சூடினார் பிரணவ்
நிகழாண்டில் 18 வீரர்கள், 36 பேர் உயிரிழப்பு
ஜம்முவின் ரஜௌரி, பூஞ்ச் ஆகிய எல்லை மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வந்த பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் நிகழாண்டில் பிராந்தியத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாகியுள்ளது.
சின்னர் வெற்றி: அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலியில் தொடங்கியிருக்கும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில், குரூப் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான யானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.