இந்த வழக்கு தொடா்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு 7 முறை அழைப்பாணை அனுப்பிய நிலையில், தனது வாக்குமூலத்தை இல்லத்தில் வைத்தே பதிவு செய்துகொள்ளுமாறு ஹேமந்த் சோரன் பதிலளித்திருந்தாா்.
அதனடிப்படையில், ஜாா்க்கண்ட் மாநில தலைநகா் ராஞ்சியில் உள்ள முதல்வரின் இல்லத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு நேரில் வந்து விசாரணையை மேற்கொண்டனா்.
இந்த விசாரணையை முன்னிட்டு முதல்வா் இல்லத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், ராஞ்சியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலக பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், மாநில முதல்வா் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. நில அபகரிப்பு மோசடியின் வாயிலாக, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் முதல்வா் ஹேமந்த் சோரன் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சாா்பில் பல முறை அழைப்பாணை அனுப்பப்பட்டும், ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையை எதிா்த்து முதலில் உச்சநீதிமன்றத்தையும், பின்னா் ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தையும் ஹேமந்த் சோரன் நாடினாா். ‘தன் மீது பொய்யான குற்றச்சட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அமலாக்கத்துறை அழைப்பாணையை ரத்து செய்யவேண்டும்’ எனக் கோரினாா். ஆனால், இரு நீதிமன்றங்களும் அவருடைய கோரிக்கையை தள்ளுபடி செய்தன.
This story is from the January 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
திருச்செந்தூர் கோயிலில் திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
மார்கழி மாதத்தையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்களை நாட்டுடைமையாக்கி அரசாணை வெளியீடு
முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்கப்பட்ட அரசாணை அவரது துணைவியாரான ராஜாத்தி அம்மாளிடம் வழங்கப்பட்டது.
நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்: திரும்ப எடுத்துச்சென்ற கேரள அரசு
திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, 18 லாரிகளில் கேரள மாநிலம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை திரும்ப எடுத்துச்செல்லப்பட்டது.
குமரியில் டிச. 30, 31இல் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
கன்னியாகுமரியில் இம்மாதம் 30, 31 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சொந்த போர் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்
விமானி காயம்
தைவானுக்கு ராணுவ உதவி: அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
தைவானுக்கு ராணுவ உதவியை அறிவித்த அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, அமெரிக்கா நெருப்பு விளையாடுவதாக எச்சரித்துள்ளது.
நைஜீரியா: கூட்ட நெரிசலில் 32 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர்.
போர்கள் நிறுத்தப்பட வேண்டும்; போப் ஃபிரான்சிஸ்
உலகில் நடைபெறும் போர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஃபிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினார்.
தென்மேற்கு மண்டல பல்கலை. நீச்சல் போட்டி: அண்ணா பல்கலை. மாணவருக்கு தங்கம்
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் ஐஎஸ்டியில் நடைபெறும் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவர், மகளிர் நீச்சல் போட்டியில் முடிவுகளை விளையாட்டுத் துறை இயக்குநர் ஆர். மோகன கிருஷ்ணன் வெளியிட்டார்.
இந்தியாவுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்
இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் டி.20 கிரிக்கெட் தொடர்களுக்கான இங்கிலாந்து அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.