சமூகத் திட்டங்களுக்கான நிதியை, செலவுகளாகப் பார்க்கவில்லை என தமிழக அரசு கூறினாலும் அதனைத் திரட்டுவதற்காக கடுமையான போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் அரசுக்கான கடன் சுமை ரூ.8.33 லட்சம் கோடியாக உயரும் என்ற நிலையும் உள்ளது.
2021-ஆம் ஆண்டு அதாவது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சியைப் பிடித்த போது அது எளிமையான நகர்த்தலாக திமுகவுக்கும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இருக்கவில்லை. 2021-இல் ஆட்சியில் அமர்ந்த போது, கரோனா எனும் தீநுண்மி பரவல் உச்சத்தில் இருந்தது. இதற்கான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளே ஆட்சியின் முதல் பொறுப்பாக இருந்தது. அதேசமயம், தேர்தல் நேரத்தில் மக்களுக் காக அளித்த வாக்குறுதிகளையும்கொஞ் சம் கொஞ்சமாக நிறைவேற்றத்தொடங் கியது.
ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே, அரசுப் பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம், ஆவின் பால் விலை குறைப்பு உள்பட ஐந்து திட்டங்களுக்கான கோப்புகளில் கையொப்பமிட்டு அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நேரடித் திட்டங்கள்: தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்களைத் தாண்டி, மக்களுடன் அரசுத் துறைகள் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையிலான திட்டங்களும் கடந்த 3 ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வியைத் தொடர்வதற்கான திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.
This story is from the May 09, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 09, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கடலூருக்கு பேரிடர் மீட்பு படையினர் வருகை
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'பென்ஜால்' புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்துக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் கடலூருக்கு புதன்கிழமை வந்தனர்.
நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் 3-ஆவது நாளாக மழை
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தஞ்சாவூரில் 2,000 ஏக்கர் பயிர்கள் சேதம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் 2,000 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்களைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
உதகையில் குடியரசுத் தலைவர் முர்மு
முப்படை பயிற்சி அதிகாரிகளுடன் இன்று கலந்துரையாடல்
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளி அறிவியலாளர்
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் (என்ஐஹெச்) இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிவியலாளர் ஜெய் பட்டாச்சார்யாவை நியமித்து அந்நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
போர்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதலில் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெறுவதால் மட்டும் அந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிடாது என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளாா்.
அதிபருக்கு கொலை மிரட்டல்; துணை அதிபர் மீது வழக்கு
பிலிப்பின்ஸ் அதிபர் ஜூனியர் ஃபெர்டினண்ட் மார்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அந்த நாட்டுத் துணை அதிபர் சாரா டுடேர்த்தே (படம்) மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
போராட்டத்தை வாபஸ் பெற்றது இம்ரான் கட்சி
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியினரைக் கலைக்க பாதுகாப்புப் படையினா் நள்ளிரவு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக, அந்தப் போராட்டத்தை கட்சி தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளது.
2-ஆவது சுற்றில் சிந்து, லக்ஷயா
சையது மோடி இந்தியா இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், உள்நாட்டு நட்சத்திரங்களான பி.வி. சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.
வங்கதேசத்தில் ஹிந்து தலைவர் கைது: ஐ.நா. தலையிட மத்திய அரசு வேண்டுகோள்
'வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதும் ஹிந்து சமூக தலைவர்கள் கைது செய்யப்படுவதும் அந்நாட்டின் இடைக்கால அரசு அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கியிருப்பதைப் பிரதிபலிக்கிறது' என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.