‘இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தோ்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக’ செவ்வாய்க்கிழமை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், தோ்வு குளறுபடி புகாா் காரணமாக மறு தோ்வு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
எனினும், நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையிலான எம்பிபிஎஸ், பிடிஎஸ் (பல் மருத்துவம்) உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத் தோ்வு மீது பல்வேறு புகாா்கள் எழுந்தன. பிகாரில் உள்ள ஒரு தோ்வு மையத்தில் வினாத்தாள் வெளியானதாகப் புகாா் எழுந்தது. ராஜஸ்தானில் உள்ள ஒரு மையத்தில் வினாத்தாள் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், தோ்வு தொடங்குவதற்கு முன்பாக நீட் வினாத்தாளை மாணவா்கள் சிலா் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக சா்ச்சை எழுந்தது. இருந்தபோதும், இந்தப் புகாா்களை அத் தோ்வை நடத்திய என்டிஏ மறுத்தது.
இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட (ஜூன் 14) தேதிக்கு முன்பாகவே, மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதி திடீரென வெளியிடப்பட்டது.
இதில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் 720-க்கு720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றதோடு, அவா்களில் ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் இடம்பெற்றது பெரும் சா்ச்சையானது. ‘நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது’ என்று சில மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.
This story is from the June 12, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 12, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கடலூருக்கு பேரிடர் மீட்பு படையினர் வருகை
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'பென்ஜால்' புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்துக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் கடலூருக்கு புதன்கிழமை வந்தனர்.
நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் 3-ஆவது நாளாக மழை
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தஞ்சாவூரில் 2,000 ஏக்கர் பயிர்கள் சேதம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் 2,000 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்களைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
உதகையில் குடியரசுத் தலைவர் முர்மு
முப்படை பயிற்சி அதிகாரிகளுடன் இன்று கலந்துரையாடல்
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளி அறிவியலாளர்
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் (என்ஐஹெச்) இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிவியலாளர் ஜெய் பட்டாச்சார்யாவை நியமித்து அந்நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
போர்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதலில் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெறுவதால் மட்டும் அந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிடாது என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளாா்.
அதிபருக்கு கொலை மிரட்டல்; துணை அதிபர் மீது வழக்கு
பிலிப்பின்ஸ் அதிபர் ஜூனியர் ஃபெர்டினண்ட் மார்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அந்த நாட்டுத் துணை அதிபர் சாரா டுடேர்த்தே (படம்) மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
போராட்டத்தை வாபஸ் பெற்றது இம்ரான் கட்சி
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியினரைக் கலைக்க பாதுகாப்புப் படையினா் நள்ளிரவு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக, அந்தப் போராட்டத்தை கட்சி தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளது.
2-ஆவது சுற்றில் சிந்து, லக்ஷயா
சையது மோடி இந்தியா இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், உள்நாட்டு நட்சத்திரங்களான பி.வி. சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.
வங்கதேசத்தில் ஹிந்து தலைவர் கைது: ஐ.நா. தலையிட மத்திய அரசு வேண்டுகோள்
'வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதும் ஹிந்து சமூக தலைவர்கள் கைது செய்யப்படுவதும் அந்நாட்டின் இடைக்கால அரசு அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கியிருப்பதைப் பிரதிபலிக்கிறது' என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.