அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜொ்மனி, கனடா, ஜப்பான் ஆகிய வளா்ந்த நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் 50-ஆவது உச்சிமாநாடு, இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 13) தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க பிரதமா் மோடிக்கு இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி அழைப்பு விடுத்திருந்தாா். அதையேற்று, கடந்த வியாழக்கிழமை இத்தாலிக்கு புறப்பட்ட பிரதமா் மோடி, அங்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நாள் முழுக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றாா். இந்திய பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பின், மோடி மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
மாநாட்டு அமா்வில் உரையாற்றிய அவா், ‘செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களில் ஏகபோகத்துக்கு முடிவுகட்ட வேண்டும்; அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்துக்கு அடித்தளமிட தொழில்நுட்பத்தை ஆக்கபூா்வமாக பயன்படுத்த வேண்டும்’ என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தாா்.
மாநாட்டையொட்டி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், இத்தாலி பிரதமா் மெலோனி, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, போப் பிரான்சிஸ் உள்ளிட்டோரை அவா் தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.
This story is from the June 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஐஎஸ்எல்: மும்பை எஃப்சி வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மும்பை சிட்டி எஃப்சி.
யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா
யு 19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா.
நாளொன்றுக்கு 140 பெண்கள் குடும்பத்தினரால் கொலை
கடந்த ஆண்டில் சர்வதேச அளவில் நாளொன்றுக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள், அவர்களின் கணவர்கள் அல்லது வாழ்க்கைத் துணை அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவில் பாதித்தவர்களுக்கு உதவ கேரள அரசுக்கு அழுத்தம்
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள அரசுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை வலியுறுத்தினார்.
அதானி குற்றச்சாட்டு: அமெரிக்க விசாரணையில் இந்தியாவுக்குப் பங்கில்லை
'தொழிலதிபர் கெளதம் அதானி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்கள் மீது அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஊழல் விசாரணையில் இந்தியாவுக்குப் பங்கில்லை' என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் விளக்கமளித்தார்.
அழிவுப் பாதையில் நாட்டின் பொருளாதார செயல்திறன்
பிரதமர் மீது காங்கிரஸ் விமர்சனம்
மகாராஷ்டிர தேர்தல் தோல்வி: காங்கிரஸ் கூட்டணியில் உரசல்
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று சிவசேனை (உத்தவ்) பிரிவைச் சேர்ந்த தலைவர் அம்பாதாஸ் தன்வே குற்றம்சாட்டினார்.
பெண்கள் வழக்குகளை கவனமாக கையாள காவல் துறைக்கு வழிகாட்டுதல்
பெண்கள் தொடர்பான வழக்குகளை மிகுந்த கவனத்துடன் கையாள காவல் துறைக்கு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று உத்தர பிரதேச அரசுக்கு மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ககன்யான் திட்டம்: நாசாவில் முதல்கட்ட பயிற்சியை முடித்த இந்திய விண்வெளி வீரர்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கான முதல்கட்ட பயிற்சியை நாசாவில் இந்திய விண்வெளி வீரர்கள் முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் போட்டியிடத் தடை: விதிமுறையை நீக்க தெலங்கானா அரசு பரிசீலனை
தெலங்கானாவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் போட்டியிடத் தடை செய்யும் விதிமுறையை நீக்க மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பரிசீலித்து வருகிறது.