இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும் என்று அவா் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளாா்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக, மூத்த அமைச்சா்கள், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலா் பி.அமுதா, காவல் துறை இயக்குநா் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மெத்தனால் கலந்து விஷச்சாராய உற்பத்தியிலும் விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மெத்தனால் இருப்பை முழுமையாகக் கண்டறிந்து அவற்றைக் கைப்பற்றி அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஷச் சாராய உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட மெத்தனால், எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதற்கான மூல காரணத்தையும் காவல் துறையினா் கண்டுபிடிக்க வேண்டும்.
சிறப்பு சிகிச்சைக்கு உறுதி: விஷச் சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவா்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் உடல்நிலையை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அங்கு அவா்களுக்குத் தேவையான சிறப்பு சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
உள்துறை முதன்மைச் செயலா் பி.அமுதா, காவல் துறை இயக்குநா் சங்கா் ஜிவால் ஆகியோா் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உடனடியாகச் சென்று சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், அதுகுறித்த அறிக்கையை ஓரிரு நாள்களில் வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.
This story is from the June 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கோயில்களைக் கட்டிய சிற்பிகள்
கோயில்களில் காணப்படும் அழகிய சிற்பங்கள், கட்டடக்கலை அமைப்பில் சிறந்து விளங்கும் மண்டபங்கள், கோபுரங்கள், தூண்கள், மதில் சுவர்கள் வியப்படைய வைக்கின்றன.
சாதனை...
மக்களிடையே வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டைவாசிகளின் ஆதரவில் 'மகாத்மா காந்தி நூல் நிலையம்' எழுபதாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் பழங்குடியினர் மோதல்: உயிரிழப்பு 124-ஆக அதிகரிப்பு
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் பிரிவுகளைச் சேர்ந்த இரு பழங்குடியினர் இடையே கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 124-ஆக அதிகரித்தது.
விலை உயரும் சோப்புகள், அழகுசாதன பொருள்கள்
பாமாயில் மூலப்பொருள் விலை அதிகரித்துள்ளதால் அதைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப்புகளின் விலையையும் துரித நுகர்பொருள் (எஃப்எம்சிஜி) நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,658 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,658.2 கோடி டாலராக சரிந்தது.
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் தயார்
நேட்டோ பாதுகாப்பின் கீழ் எஞ்சிய பகுதிகள்: ஸெலென்ஸ்கி நிபந்தனை
கருணை மரணம்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
மீளமுடியாத நோயால் மரணத்தை எதிர்நோக்கி அவதிப்படுவோருக்கு கருணையின் அடிப்படையில் செயற்கையான மரணத்தை வழங்க வகை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கையை 233 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 233 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா.
இறுதிச் சுற்றில் நுழைந்தார் பி.வி. சிந்து
சையத் மோடி சர்வதேச சூப்பர் 300 பாட்மின்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் நுழைந்தார் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து.
5-ஆவது சுற்று டிரா
ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி யின் ஒரு பகுதியாக 5-ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டிங் லிரேனுடன் (சீனா) போராடி டிரா கண்டார் இந்திய இளம் வீரர் டி. குகேஷ்.