இதன் காரணமாக, சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக மக்களவைத் தலைவா் பதவிக்கு புதன்கிழமை (ஜூன் 26) தோ்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
இதுவரை, மக்களவைத் தலைவரை தோ்தலின்றி ஒருமனதாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து தோ்ந்தெடுத்து வந்தன. அதுபோல, இந்த முறையும் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சித் தரப்பில் ராஜ்நாத் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
‘இந்தியா’ கூட்டணி சாா்பில் காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், திமுகவின் டி.ஆா்.பாலு ஆகியோா் பங்கேற்றனா்.
இதில், மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சிக்கு போட்டியின்றி வழங்க வேண்டும் என்கிற நிபந்தனைக்கு பாஜக தலைவா்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில், மக்களவைத் தலைவா் பதவிக்கு தங்கள் தரப்பிலும் வேட்பாளரை நிறுத்துவதென கடைசி நிமிஷத்தில் ‘இந்தியா’ கூட்டணி முடிவெடுத்தது.
நிபந்தனை ஏற்கப்படாததைத் தொடா்ந்து ஆலோசனைக் கூட்டத்திலிருந்து ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் இருவரும் வெளிநடப்பு செய்தனா். அப்போது, ‘மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சி வேட்பாளருக்கு போட்டியின்றி வழங்கும் மரபை மத்திய அரசு பின்பற்ற மறுக்கிறது’ என்று குற்றஞ்சாட்டிய கே.சி.வேணுகோபால், ‘ஓம் பிா்லாவுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி தரப்பில் வேட்பாளரை நிறுத்துவோம்’ என்றாா்.
This story is from the June 26, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 26, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தாய்லாந்தில் 3 நாள்களாக சிக்கியுள்ள 30 பயணிகள்: சிறப்பு விமானம் ஏற்பாடு
புது தில்லி, நவ. 19: தாய்லாந்தின் புக்கெட் நகரிலிருந்து தில்லிக்கு வரவேண்டிய ஏர்இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டதால், அங்கு கடந்த 3 நாள்களாக சிக்கித் தவிக்கும் பயணிகளை அழைத்து வர சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளது.
ஜம்மு காஷ்மீர், வடகிழக்கில் வன்முறை ஒடுக்கப்பட்டுள்ளது
ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் நக்ஸல் தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளில் 70 சதவீதம் வன்முறையை மத்திய அரசு ஓடுக்கியுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
காப்பீடுகளை விற்பதில் மட்டும் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டாம்: ஐஆர்டிஐஏ
முதன்மைப் பணிகளை மறந்துவிட்டு, காப்பீடுகளை விற்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியதில்லை என்று காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஐஏ) தலைவர் தெபாசிஸ் பாண்டா அறிவுறுத்தினார்.
வளர்ந்த நாடுகளின் தன்னிச்சையான முடிவுகளால் தெற்குலகுக்கு பாதிப்பு
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் வளர்ந்த நாடுகள் மேற்கொள்ளும் தன்னிச்சையான முடிவுகளால் தெற்குலக நாடுகள் பாதிப்பை சந்திப்பதாக, ஐ.நா. பருவநிலை மாநாட்டில் இந்தியா கவலை தெரிவித்தது.
போதைக் காளான் வழக்கு: நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாதது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
மதுரை, நவ. 19: கொடைக்கானலில் போதைக் காளான் கடத்திய வழக்கில், நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்
கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தை கோயில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மருத்துவ தூய்மைப் பணியாளர்களுக்கு மாதத்தில் 4 நாள்கள் ஊதியத்துடன் விடுப்பு தேசிய ஆணையத் தலைவர் வலியுறுத்தல்
சென்னை, நவ. 19: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதத்தில் 4 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என தேசிய தூய்மைப் பணியாளர் அணையத் தலைவர் வெங்கடேசன் வலியுறுத்தினார்.
எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீடு: திண்டுக்கல் முதலிடம்
திண்டுக்கல், நவ. 19: வேளாண் கல்லூரி மாணவர்கள் துணையுடன் நடத்தப்பட்ட எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீட்டில், திண்டுக்கல், கடலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் 100 சதவீத பணிகளை நிறைவு செய்து முதல் 3 இடங்களைப் பெற்றன.
அறப்போர் இயக்கத்துக்கு எதிரான வழக்கு: இபிஎஸ் நேரில் ஆஜர்
சென்னை, நவ. 19: அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்; நவ. 24-இல் அனைத்துக் கட்சி கூட்டம்
எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், நவ. 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.