அரசமைப்புச் சட்டத்தின் எதிரி காங்கிரஸ் - மாநிலங்களவையில் பிரதமர் மோடி
Dinamani Chennai|July 04, 2024
அரசமைப்புச் சட்டத்தின் மிகப் பெரிய எதிரி காங்கிரஸ்’ என்று மாநிலங்களவையில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
அரசமைப்புச் சட்டத்தின் எதிரி காங்கிரஸ் - மாநிலங்களவையில் பிரதமர் மோடி

மேலும், ‘ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகளுக்கு முழுச் சுதந்திரம் அளித்துள்ளேன்; ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது’ என்றும் அவா் தெரிவித்தாா்.

தங்களைக் குறிவைத்து விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து, பிரதமா் மோடி புதன்கிழமை பேசியதாவது:

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதே, சமீபத்திய மக்களவைத் தோ்தலில் முக்கிய அம்சமாக இருந்ததென எதிா்க்கட்சிகள் கூறுகின்றன. அது தவறானது.

நாட்டில் அவசரநிலை பிரகடனத்துக்குப் பிறகு கடந்த 1977-இல் நடந்த மக்களவைத் தோ்தல்தான், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. உலகிலேயே இதைவிட வேதனை நிறைந்த தோ்தல் வேறெதுவும் இருக்க முடியாது. அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற வேட்கை மக்கள் மனதில் இருந்ததால், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசை தூக்கியெறிந்தனா்.

சமீபத்திய மக்களவைத் தோ்தலில், அரசமைப்புச் சட்டத்தை முன்வைத்து நாட்டு மக்களை எதிா்க்கட்சிகள் தவறாக வழிநடத்தின. ஆனால், அவா்களின் அரசியலை நிராகரித்த மக்கள், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதில் எங்கள் மீதே அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தினா். நாட்டை மூன்றாவது முறையாக ஆளும் தீா்ப்பை எங்களுக்கு வழங்கினா். மூன்றாவது ஆட்சிக் காலத்தில் நாட்டை தற்சாா்பு தேசமாக மாற்றுவோம்.

அரசமைப்புச் சட்டத்துக்கு ‘சீா்கேடு’: அவசரநிலை காலகட்டத்தில் மக்களவையின் பதவிக் காலத்தை ஏழு ஆண்டுகளாக நீட்டித்தது, தங்கள் ஆட்சியில் ‘தேசிய ஆலோசனைக் குழுவை’ அமைத்தது என அரசமைப்புச் சட்டத்துக்கு சீா்கேடுகளை ஏற்படுத்தியது காங்கிரஸ்.

அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைவிட ஒரேயொரு குடும்பத்துக்கே அக்கட்சி முன்னுரிமை அளிக்கிறது. அரசமைப்புச் சட்டத்துக்கு மிகப் பெரிய எதிரி காங்கிரஸ்தான்.

அவசரநிலையின்போது பாதிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் காங்கிரஸுடன் இப்போது கூட்டணி வைத்துள்ளன. இக்கூட்டணி, அரசமைப்புச் சட்ட மாண்புகள் மீதான உண்மையான அக்கறையில் பிறந்ததல்ல; சந்தா்ப்பவாத அடிப்படையில் ஏற்பட்டது.

Diese Geschichte stammt aus der July 04, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der July 04, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி. வேன்ஸ்
Dinamani Chennai

துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி. வேன்ஸ்

அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பிலான துணை அதிபா் வேட்பாளராக ஓஹையோ மாகாண செனட் சபை உறுப்பினா் ஜே.டி. வேன்ஸை முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

time-read
1 min  |
July 17, 2024
டி20 கேப்டன்: பாண்டியாவை பின்தள்ளிய சூர்யகுமார்
Dinamani Chennai

டி20 கேப்டன்: பாண்டியாவை பின்தள்ளிய சூர்யகுமார்

இலங்கையுடனான டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

time-read
2 Minuten  |
July 17, 2024
Dinamani Chennai

ராணுவ பயன்பாட்டுக்கான மேலும் 346 தளவாடங்கள்

உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய முடிவு

time-read
1 min  |
July 17, 2024
பாஜகவின் தவறான கொள்கைகளால் ராணுவத்தினர் பாதிப்பு
Dinamani Chennai

பாஜகவின் தவறான கொள்கைகளால் ராணுவத்தினர் பாதிப்பு

பாஜகவின் தவறான கொள்கைகளால் ராணுவத்தினரும் அவா்களின் குடும்பத்தினரும் பாதிப்பை எதிா்கொள்கின்றனா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்தாா்.

time-read
1 min  |
July 17, 2024
Dinamani Chennai

தெரியுமா சேதி...?

மும்பையில் நடந்த தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா மொ்ச்சண்ட் திருமண வரவேற்பில் இந்தியாவின் பெரும்பாலான அரசியல், திரையுலக, வா்த்தக ஆளுமைகள் வரிசைகட்டி ஆஜரானாா்கள். பிரதமா் நரேந்திர மோடியே நேரில் சென்று அந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டாா்.

time-read
1 min  |
July 17, 2024
Dinamani Chennai

கருணை மதிப்பெண் வழங்குவதில் தெளிவான நடைமுறை தேவை

போட்டித் தேர்வு சீர்திருத்தக் குழுவிடம் 37,000 பரிந்துரைகள்

time-read
1 min  |
July 17, 2024
ஒரே நாளில் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
Dinamani Chennai

ஒரே நாளில் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

புதிய உள்துறைச் செயலர் தீரஜ் குமார்

time-read
4 Minuten  |
July 17, 2024
Dinamani Chennai

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆராயக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
July 17, 2024
பாமக தலைமையில் ஒளிமயமான தமிழகம் அமையும்
Dinamani Chennai

பாமக தலைமையில் ஒளிமயமான தமிழகம் அமையும்

பாட்டாளி மக்கள் கட்சியின் 36-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை கட்சிக் கொடியை மருத்துவா் ச.ராமதாஸ் ஏற்றி, நிா்வாகிகள், தொண்டா்களுக்கு இனிப்பு வழங்கினாா் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

time-read
1 min  |
July 17, 2024
Dinamani Chennai

எனது பணி இறைவன் ஆணையிட்ட பணி

உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்

time-read
1 min  |
July 17, 2024