கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை புதன்கிழமை 250-ஆக அதிகரித்தது.
இதுவரை 1,500-க்கு மேற்பட்டோா் மீட்கப்பட்ட நிலையில், 240 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. தோண்ட தோண்ட உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
‘கேரளம் இதுவரை சந்தித்திராத துயரமான தருணமிது; மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன’ என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.
மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பெரிய பாறைகளும் மண்ணும் கலந்துவந்த வெள்ளத்தால், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்கள் உருக்குலைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் புதையுண்டதோடு, சாலைகள், பாலங்கள், வாகனங்கள், மரங்கள் உள்ளிட்டவை வாரிசுருட்டி செல்லப்பட்டன. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள், உயிரோடு புதைந்தனா்.
பசுமை படா்ந்த மலைகள், வனங்கள், அருவிகள் என சுற்றுலாவுக்கு பெயா்பெற்ற இந்தப் பகுதிகள், தற்போது அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்த சுமாா் 1,200 போ் மீட்பு-தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா். ராணுவத் தரப்பில் தற்காலிக பாலங்கள் அமைத்தும், கயிறுகள் மூலமும் மீட்பு பணி நடைபெறுகிறது.
முண்டக்கையில் 90 சதவீத வீடுகள் நிலச்சரிவில் புதையுண்டுவிட்டன. அங்கு முழுவதுமாக துண்டிக்கப்பட்ட பகுதிகளை மீட்புக் குழுவினா் புதன்கிழமை காலையில்தான் சென்றடைந்தனா். மோப்ப நாய்கள் உதவியுடன், புதையுண்டவா்களைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
This story is from the August 01, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 01, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பாகிஸ்தானியர்களுக்கு விசா: கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது வங்கதேசம்
பாகிஸ்தானியர்களுக்கான விசா (நுழைவு இசைவு) கட்டுப்பாடுகளை வங்கதேச இடைக்கால அரசு தளர்த்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை: இந்திய வம்சாவளி அமைச்சர் அனிதா ஆனந்த்
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது
டிரம்ப்புக்கு முன்னாள் பிரதமர் பதிலடி
டிரம்ப் பதவியேற்பு விழா இந்தியா சார்பில் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பு
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கும் நிலையில், அதில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்க இருக்கிறார்.
கேரளம்:காவல்துறை அதிகாரியை தாக்கிய 20 பாதிரியார்கள் மீது வழக்கு
எர்ணாகுளம்-அங்கமாலி பேராய ஆர்ச்பிஷப் வீட்டுக்கு வெளியே கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறை அதிகாரியை தாக்கிய வழக்கில் 20 பாதிரியார்கள் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இன்டர்போல் 'சில்வர்' நோட்டீஸ்: இந்தியாவின் முன்மொழிவு
உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குபவர்களை கண்டறிய இன்டர்போல் (சர்வதேச காவல் துறை ஒத்துழைப்பு அமைப்பு) அண்மையில் அறிமுகம் செய்த 'சில்வர்' நோட்டீஸ் (வெள்ளி எச்சரிக்கை அறிவிப்பு) என்ற புதிய நடைமுறை, இந்தியாவின் முன்மொழிவு என்று சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட் கூறினார்.
மகாராஷ்டிரத்தில் 5,000 இளைஞர்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து விடுவிப்பு
மகாராஷ்டிரத்தின் கட்ச் ரோலி பிராந்தியத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் 5,000 இளைஞர்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து வெளியேறி, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
'இண்டி' கூட்டணியை உள்ளாட்சி தேர்தலுக்காக உருவாக்கவில்லை
தனித்துப் போட்டியிடுவது குறித்து சிவசேனை (தாக்கரே) விளக்கம்
திரிணமூல் காங்கிரஸ்: கேரள ஒருங்கிணைப்பாளராக பி.வி.அன்வர் பொறுப்பேற்பு
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கேரள ஒருங்கிணைப்பாளராக எம்எல்ஏ பி.வி.அன்வர் பொறுப்பேற்றுள்ளார்.