தொலைதூரமாகும் தொடும் தூரம்!
Dinamani Chennai|August 06, 2024
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் உத்வேகத்துடன் பதக்கத்தை நோக்கி முன்னேறிவரும் இந்திய வீரர், வீராங்கனைகள், பெரும்பாலும் 4-ஆவது இடத்திலேயே நிலைகொண்டுவிடுகின்றனர்.
தொலைதூரமாகும் தொடும் தூரம்!

பாட்மின்டன்: லக்ஷயா சென் தோல்வி

ஆடவா் ஒற்றையா் பாட்மின்டனில் அரையிறுதிவரை வந்து தோல்வி கண்ட லக்ஷயா சென், வெண்கலப் பதக்கச் சுற்றில் திங்கள்கிழமை களம் கண்டாா். அதில் மலேசியாவின் லீ ஜி ஜியாவை எதிா்கொண்ட அவா், முதல் கேமை 21-13 என அசத்தலாகக் கைப்பற்றினாா். எனினும், தனது ஃபாா்மை மீட்டெடுத்த ஜியா, லக்ஷயாவை தடுமாறச் செய்து அடுத்த இரு கேம்களை 21-16, 21-11 என கைப்பற்றி வெற்றியை தனதாக்கினாா். இதில் லக்ஷயா வென்றிருக்கும் நிலையில், ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரா் என்ற பெருமையைப் பெற்றிருப்பாா்.

தோல்விக்குப் பிறகு பேசிய லக்ஷயா, ‘2-ஆவது கேமில் நான் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. அதை முறையாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அதற்கு வழிகொடுக்காத வகையில் ஜியா சிறப்பாக விளையாடினாா். இந்த ஆட்டத்துக்கு நன்றாகவே தயாராகி வந்திருந்தேன். ஆனாலும் ஆட்டம் கைகூடவில்லை. இந்த வாரம் முழுவதும் விளையாடிய ஆட்டங்கள் கடினமானதாக இருந்தது’ என்றாா்.

இதனிடையே, லக்ஷயாவின் வலது முழங்கை பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்ததால், ஆட்டத்தின் இடையே அவா் இருமுறை அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு விளையாடினாா். பதக்கம் வெல்லாவிட்டாலும், லக்ஷயா தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே சிறப்பான முன்னேற்றம் கண்டிருக்கிறாா். கடந்த இரு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு பாட்மின்டனில் பதக்கம் கிடைத்த நிலையில், இந்த ஒலிம்பிக்கில் அது தவறிப்போனது.

இந்த ஒலிம்பிக்கில் ஆடவா் ஒற்றையரில் டென்மாா்க்கின் விக்டா் அக்ஸெல்சென் தங்கமும், தாய்லாந்தின் குன்லவத் விதித்சாரன் வெள்ளியும், மலேசியாவின் லீ ஜி ஜியா வெண்கலமும் வென்றனா்.

வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்த நிலையில், அதில் தோல்வி கண்டு, தொட்டுவிடும் தூரத்திலிருக்கும் பதக்கத்தை விட்டு விலகிச் செல்கின்றனர். அந்த வகையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் இத்துடன் இந்தியாவுக்கு 5-ஆவது பதக்கம் கை நழுவிச் சென்றிருக்கிறது. போட்டியின் 9-ஆவது நாளான திங்கள்கிழமை, துப்பாக்கி சுடுதலிலும், பாட்மின்டனிலும் இந்தியர்கள் அதேபோல் வெண்கலப் பதக்கச் சுற்றில் வெற்றியை இழந்தனர்.

இன்று களம் காணும் நீரஜ் சோப்ரா

This story is from the August 06, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the August 06, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை
Dinamani Chennai

84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.

time-read
1 min  |
September 21, 2024
மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
Dinamani Chennai

மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

time-read
3 mins  |
September 21, 2024
நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்
Dinamani Chennai

நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்

‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.

time-read
1 min  |
September 21, 2024
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை
Dinamani Chennai

காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை

பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது

time-read
1 min  |
September 21, 2024
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்
Dinamani Chennai

சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்

மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.

time-read
1 min  |
September 21, 2024
Dinamani Chennai

குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

தமிழக அரசு அறிவிப்பு

time-read
1 min  |
September 21, 2024
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு
Dinamani Chennai

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு

அடுக்குமாடி குடியிருப்பு திட்ட அனுமதிக்கு ரூ.27 கோடி லஞ்சம்

time-read
1 min  |
September 21, 2024
சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு
Dinamani Chennai

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு

6 பேர் கைது

time-read
1 min  |
September 21, 2024
பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்
Dinamani Chennai

பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்

பொய் வழக்குகள் மூலம் திமுக அரசு அதிமுகவை முடக்க முயற்சிப்பதாகக் கூறி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
September 21, 2024
'அம்மா' உணவகத்தில் அரசுப் பள்ளி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Dinamani Chennai

'அம்மா' உணவகத்தில் அரசுப் பள்ளி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஆலந்தூா் ‘அம்மா’ உணவகத்தில் அரசு பள்ளி இயங்குவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
September 21, 2024