எளிதான நிர்வாக சீர்திருத்தத்துக்கு ஆலோசனைகள்
Dinamani Chennai|August 07, 2024
தமிழ்நாடு அரசின் நிதி வளத்தைப் பெருக்கவும், இலகுவான நிா்வாகத்தை மேற்கொள்ளவும் ஆலோசனைகளைக் கூற வேண்டுமென மாநில திட்டக் குழுவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
எளிதான நிர்வாக சீர்திருத்தத்துக்கு ஆலோசனைகள்

மேலும், அரசின் செயல்பாடுகள் தொடா்பாக மிகப்பெரிய அளவிலான கருத்தரங்கை நடத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டாா்.

திட்டக் குழுக் கூட்டம்: மாநில திட்டக் குழுவின் 5-ஆவது கூட்டம், தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: ஆட்சி சக்கரத்தை இயக்குபவா்களாக நாங்கள் இருந்தாலும், அதற்கு வழிகாட்டுபவா்களாக திட்டக் குழுவினா் இருக்கிறாா்கள். நாங்கள் செல்லும் பாதையைத் தீா்மானிப்பவா்களாக மட்டுமல்லாமல், அதிலுள்ள நிறை குறைகளை எடுத்துச் சொல்பவா்களாகவும் இருக்கிறாா்கள்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் தொடா்பான 16 அறிக்கைகளை திட்டக் குழுவின் துணைத் தலைவா் ஜெயரஞ்சன் ஏற்கெனவே என்னிடம் அளித்திருந்தாா். மாநில அரசின் ஒவ்வொரு திட்டமும் எந்த அளவுக்கு மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களாகச் செயல்படுகின்றன என்பதை அந்த அறிக்கை மூலமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

அரசின் ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. மாநில அரசின் திட்டங்களால் பயன் பெற்ற பயனாளிகளிடம் இருந்து நேரடியாகத் தகவல்களைப் பெற்று, அதைப் புள்ளிவிவரங்களாக திட்டக் குழு அளிக்கிறது.

This story is from the August 07, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the August 07, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

டிச.30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் (ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு) காரணமாக தமிழகத்தில் டிச.30 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

கிறிஸ்துமஸ்: ஆளுநர்கள், முதல்வர் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
December 25, 2024
தடைகளை உடைத்து மனங்களில் நிறைந்தவர் பெரியார் ஈவெரா
Dinamani Chennai

தடைகளை உடைத்து மனங்களில் நிறைந்தவர் பெரியார் ஈவெரா

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

time-read
1 min  |
December 25, 2024
கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வெள்ளிவிழா விழிப்புணர்வு பேருந்துகள்
Dinamani Chennai

கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வெள்ளிவிழா விழிப்புணர்வு பேருந்துகள்

துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
December 25, 2024
காஸா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
Dinamani Chennai

காஸா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

காஸாவிலுள்ள இரு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. மேலும் ஒரு மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தது.

time-read
1 min  |
December 25, 2024
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அணு மின் நிலைய ஊழல் விசாரணை
Dinamani Chennai

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அணு மின் நிலைய ஊழல் விசாரணை

அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா 500 கோடி டாலர் (சுமார் ரூ.43,000 கோடி) முறைகேடு செய்த குற்றச்சாட்டு குறித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

38 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களை இழந்த ஜியோ!

கடந்த அக்டோபரில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 37.6 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இருந்தாலும், சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் அந்த நிறுவனம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

time-read
1 min  |
December 25, 2024
பிஆர்எஸ்ஐ மாநாடு: 9 விருதுகளைப் பெற்ற தமிழகம்
Dinamani Chennai

பிஆர்எஸ்ஐ மாநாடு: 9 விருதுகளைப் பெற்ற தமிழகம்

பப்ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்எஸ்ஐ) அமைப்பின் தேசிய மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

time-read
1 min  |
December 25, 2024
சூரியனை மிக நெருக்கத்தில் கடக்கும் நாசா விண்கலம்
Dinamani Chennai

சூரியனை மிக நெருக்கத்தில் கடக்கும் நாசா விண்கலம்

சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள பார்க்கர் விண்கலம், இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் அதைக் கடக்க விருக்கிறது.

time-read
1 min  |
December 25, 2024