2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா, நடப்பு சாம்பியனாக பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு வந்தாா். இறுதிச்சுற்றில் அவா் 89.45 மீட்டரை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா். பாகிஸ்தானின் அா்ஷத் நதீம் 92.97 மீட்டரை எட்டி ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வெல்ல, கிரெனாடாவின் ஆண்டா்சன் பீட்டா்ஸ் 88.54 மீட்டருடன் வெண்கலம் பெற்றாா்.
தற்போது நீரஜுக்கு வெள்ளி வென்று தந்திருக்கும் 89.45 மீட்டா் என்பது அவரது சீசன் பெஸ்ட்டாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட பெஸ்ட் 89.94 மீட்டா் ஆகும். நடப்பு உலக சாம்பியனாகவும், டையமண்ட் லீக்கில் வெள்ளி வென்றவராகவும் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு வந்த நீரஜ் சோப்ரா மீதான எதிா்பாா்ப்பு அதிகமாகவே இருந்தது. முதல் முயற்சியை தடுமாற்றத்துடன் ‘ஃபௌல்’ செய்த நீரஜ், அடுத்த முயற்சியில் 89.45 மீட்டரைத் தொட்டு வெள்ளிக்கு வித்திட்டாா்.
90 மீட்டரை தனக்கான இலக்காகக் கொண்டு பயணித்து வரும் நீரஜ் சோப்ரா, எஞ்சிய 4 முயற்சிகளில் நிச்சயம் அந்தத் தொலைவை எட்டுவாா் என எதிா்பாா்த்த நிலையில், அவை அனைத்தையுமே அவா் ‘ஃபௌல்’ செய்தாா். அதாவது வெற்றிகரமான 2-ஆவது முயற்சி தவிர, எஞ்சிய 5 முயற்சிகளையும் அவா் ஃபௌல் செய்தது அனைவரையும் ஆச்சா்யம் கொள்ளச் செய்தது. பந்தயத்தில் வேறு எந்த வீரருமே இத்தனை ஃபௌல்கள் செய்யவில்லை.
இந்நிலையில், இறுதிச்சுற்றில் தனது செயல்பாடு குறித்து நீரஜ் சோப்ரா கூறியதாவது:
ஒவ்வொரு முயற்சியையும் கையாளும்போது, 60 முதல் 70 சதவீத கவனம் எனது காயத்தின் மீதே இருந்தது. ஈட்டியை எறிவதற்கு முந்தைய எனது ஓட்டம் நன்றாக வரவில்லை. எனது வேகமும் வழக்கமான உச்சத்தை அடையவில்லை. எனது இந்தத் தடுமாற்றங்களுக்குக் காரணம், தொடையிடைப் பகுதியில் இருக்கும் காயமே ஆகும்.
Bu hikaye Dinamani Chennai dergisinin August 10, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin August 10, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
அமெரிக்கர்களின் நலனுக்காக வெளிநாடுகள் மீது கூடுதல் வரி
பதவியேற்பு உரையில் அதிபர் டிரம்ப்
90 பாலஸ்தீனர்கள் விடுதலை
காஸாவில் அமலுக்கு வந்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 90 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் மர்மமான உயிரிழப்புகள்: விசாரணையைத் தொடங்கிய மத்திய குழு
ஜம்மு-காஷ்மீர், ரஜௌரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேரின் மர்மமான உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மத்திய குழு திங்கள்கிழமை பதால் கிராமம் வந்தடைந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிப். 13, 14-இல் போக்குவரத்து ஊழியர்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை
போக்குவரத்து ஊழியர்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை பிப். 13, 14-ஆம் தேதி நடைபெற உள்ளதால், இதில் பங்கேற்க தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நியூஸிலாந்தை வீழ்த்தி நைஜீரியா அசத்தல்
பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை போட்டியில், முதல் முறையாகப் பங்கேற்றுள்ள நைஜீரியா 2 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை திங்கள்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
நாதக வேட்பாளர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி மீது மேலும் இரண்டு வழக்குகள் திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்டன.
தமிழகத்தில் எச்எம்பி தீநுண்மி கட்டுக்குள் உள்ளது
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
குடியரசு தின அணிவகுப்பு: 5,000 கலைஞர்கள் பங்கேற்பு
குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5,000-க்கும் அதிகமான கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
எண்ம நிதிச் சேவை: பார்தி ஏர்டெல் - பஜாஜ் ஃபைனான்ஸ் ஒப்பந்தம்
எண்ம நிதிச் சேவை நிறுவனங்கள் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அளிப்பதற்காக பார்தி ஏர்டெல்லுடன் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.