பயன்பாட்டுக்கு வந்தது அத்திக்கடவு - அவிநாசி திட்டம்
Dinamani Chennai|August 18, 2024
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் 67 ஆண்டுகால கனவை நனவாக்கும் வகையில் ரூ.1,916 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
பயன்பாட்டுக்கு வந்தது அத்திக்கடவு - அவிநாசி திட்டம்

பவானி ஆற்றில் இருந்து மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் வறண்ட பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரிகளுக்கு கொண்டுசெல்லும் வகையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 1957-ஆம் ஆண்டு முதன்முதலில் அப்போதைய முதல்வர் காமராஜர் இடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். பின்னர், 1972-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கொள்கை ரீதியாக இத் திட்டம் ஏற்கப்பட்டு, திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின்போது திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

பின்னர், விவசாயிகளின் தொடர் போராட்டங்களால் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார். 2021-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இத்திட்டத்துக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.

உபரிநீர் வெளியேற்றம் இல்லாததால், திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, அதன் கசிவுநீர் பவானி ஆற்றில் வெளியேறிவருகிறது.

This story is from the August 18, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the August 18, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.