மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி
Dinamani Chennai|September 22, 2024
'க்வாட்' உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சனிக்கிழமை சென்றார்.
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி

தனது பயணத்தை தொடங்கும் முன்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மைக்காக பணியாற்றும் முக்கியக் கூட்டமைப்பாக க்வாட் உருவெடுத்துள்ளது' என்று குறிப்பிட்டார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் 'க்வாட்' கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாடு, அமெரிக்காவின் டெலாவர் மாகாணத்தில் உள்ள அதிபர் ஜோ பைடனின் சொந்த நகரமான வில்மிங்டனில் நடை பெறுகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, வளர்ச்சி, ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதோடு, உக்ரைன் மற்றும் காஸா பிரச்னைக்கு அமைதித் தீர்வைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.

மேலும், சுகாதார பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், வளரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, போக்குவரத்து தொடர்புகள், பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளனர். இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் சீனாவுக்கு எதிரான கூட்டமைப்பாக 'க்வாட்' பார்க்கப்படுகிறது.

பைடனுடன்பேச்சுவார்த்தை: மாநாட்டையொட்டி, அதிபர் ஜோ பைடன் மற்றும் இதர நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அதிபர் பைடன் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு சில ஒப்பந்தங்களும் கையொப்பமாக வைக்கப்படும். ரஷிய-உக்ரைன் போர் விவகாரமும், இவ்விரு நாடுகளுக்கும் சமீபத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணமும் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறும் எனக் கூறப்படுகிறது. மாநாட்டைத் தொடர்ந்து, அதிபர் பைடன் அளிக்கும் இரவு விருந்திலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.

This story is from the September 22, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the September 22, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.