அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. நிகழாண்டு அந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முதலில் அந்நாட்டின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவிக்கப்பட்டார். குடியரசு கட்சி வேட்பாளராக அந்நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
எனினும் வயது முதிர்வு காரணமாக பைடனின் செயல்திறனில் சுணக்கம் ஏற்பட்டதால், தேர்தலையொட்டி டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறியது விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டும் என்று அவரின் சொந்தக் கட்சியினரே அழுத்தம் அளித்தனர். இதையடுத்து, அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பைடன் விலகினார். இதைத் தொடர்ந்து, ஜனநாயக கட்சி வேட்பாளராக அந்நாட்டின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.
அமெரிக்க புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வாக்குப் பதிவு நாளுக்கு முன்பாகவே வெவ்வேறு நாள்களில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி அந்நாட்டில் உள்ளது. இந்த நடைமுறையின் படி, வாக்குப் பதிவு மையங்களில் நேரடியாகவும், தபால் வாக்குகளையும் வாக்காளர்கள் செலுத்துவது வழக்கம். இதன்மூலம், தேர்தல் நாளன்று மோசமான வானிலை, வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருத்தல், வாக்குப் பதிவு நாளன்று ஏற்படக்கூடிய எதிர்பாராத சிக்கல்கள் உள்ளிட்டவற்றை வாக்காளர்கள் தவிர்க்க முடியும். இதன்படி 8.2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் முன்கூட்டியே வாக்களித்தனர்.
This story is from the November 06, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 06, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சொந்த ஊரில் அமெரிக்கர்கள் சிறப்பு பூஜை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி, அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரத்தில், அவரது குலதெய்வ கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
விதிகளை மீறும் மனமகிழ் மன்றங்கள்: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு
விதிகளை மீறிச் செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரியில் கண்ணாடிக் கூண்டு பாலப் பணி: அடுத்த ஆண்டு முடிக்க இலக்கு
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் வள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியை அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜெயந்திநாதருக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு வைர வேல்
திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
ராயல் என்ஃபீல்டின் மின்சார பைக்!
மின்சாரத்தில் இயங்கக் கூடிய தனது முதல் மோட்டார்சைக்கிள் ரகங்களை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இத்தாலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அக்டோபரில் மீண்டெழுந்த உற்பத்தித் துறை
முந்தைய செப்டம்பர் மாதத்தில் எட்டு மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய உற்பத்தித் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை காலையில் கரடியின் பிடியில் இருந்த பங்குச்சந்தை பின்னர் காளையின் பிடிக்கு வந்தது. இதனால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் நிறைவடைந்தன.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் காஸா, உக்ரைன்...
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
ஆசியாவின் அமைதிக்கு புத்த மதத்தின் பங்களிப்பு
விரிவாக விவாதிக்க குடியரசுத் தலைவர் அழைப்பு