மற்ற நாடுகளில் நடைபெறும் தேர்தல்களைப் போல் இதை சாதாரணமாகப் பார்க்க முடியாது. காரணம், 'உலகின் போலீஸ்காரர்' என்று அழைக்கப்படும் அந்த நாட்டின் தலைமைப் பதவியில் யார் அமர்கிறார்கள் என்பதும், அவர் என்னென்ன முடிவுகள் எடுக்கிறார் என்பதும் சர்வதேச அளவில் நடைபெறும் போர்கள் உள்ளிட்ட பிரச்னைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், தற்போது காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் போர், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு ஆகியவற்றின் மீது அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? காஸா போர்: இந்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகிய இருவருமே இஸ்ரேலுக்கு தங்களது தீவிர ஆதரவை வெளிப்படுத்திவருகின்றனர். இதன் காரணமாக, இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் காஸா போர் அவ்வளவு விரைவில் முடிவுக்கு வந்துவிடாது என்றுதான் அரபு உலகம் கருதுகிறது. அத்துடன், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வு இருவரிடமே இல்லை.
இருந்தாலும், அடுத்த அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றால் இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கெனவே, தனது முந்தைய ஆட்சியின்போது சர்ச்சைக்குரிய ஜெருசலேத்தில் இஸ்ரேலுக்கான தூதரகத்தைத் திறந்து பாலஸ்தீனர்களின் கோபத்துக்கு டிரம்ப் ஆளானார். இஸ்ரேலுடன் நீண்ட காலமாக பகை பாராட்டிவந்த அரபு நாடுகளை அழைத்துவந்து அந்த நாட்டுடன் உறவு ஏற்பட வழிசெய்தார். ஒபாமா காலத்தில் கொண்டுவரப்பட்ட - இஸ்ரேல் கடுமையாக எதிர்த்துவந்த - ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
This story is from the November 06, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 06, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
907 புள்ளிகளுடன் பும்ரா சிறப்பிடம்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 907 புள்ளிகளை ஈட்டி புதிய சாதனை படைத் துள்ளார் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா.
காஸா: இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 17 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 17 பேர் உயிரிழந்தனர்; 41 காயமடைந்தனர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரானது பாகிஸ்தான்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக பாகிஸ்தான் புதன்கிழமை பொறுப்பேற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு அந்த கவுன்சிலில் பாகிஸ்தான் அங்கம் வகிக்கிறது.
'பாட்ஷா' வசனத்துடன் புத்தாண்டு வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த், தனது தளமான 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்) இல், 2025 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.
மின் நுகர்வு 13,040 கோடி யூனிட்டுகளாக உயர்வு
இந்தியாவின் மின் நுகர்வு கடந்த டிசம்பர் மாதத்தில் 13,040 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ‘ஸ்கரப் டைபஸ்' பாக்டீரியா தொற்று அதிகரிப்பு
ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ள பொது சுகாதாரத் துறை, அதற்கான சிகிச்சை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
புத்தாண்டில் உயர்ந்த தங்கம் விலை: பவுன் ரூ.57,200-க்கு விற்பனை
ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான புதன்கிழமை, தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.57,200-க்கு விற்பனையாகியது.
திருச்செந்தூர் கோயிலில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ரஷிய எரிவாயுப் போக்குவரத்தை நிறுத்தியது உக்ரைன்
தங்கள் நாடு வழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் ரஷிய எரிவாயு விநியோகிக்கப்படுவதை உக்ரைன் புதன்கிழமை நிறுத்தியது.
அமெரிக்கா: கார் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினரின் மீது காரை ஏற்றி மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்; தாக்குதல் நடத்திய நபர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.