அலிகர் முஸ்லிம் பல்கலை.யின் சிறுபான்மை அந்தஸ்துக்கு எதிரான தீர்ப்பு ரத்து
Dinamani Chennai|November 09, 2024
புது தில்லி, நவ. 8: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்தை ரத்து செய்து உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 1967-இல் பிறப்பித்த தீர்ப்பை உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் அமர்வு வெள்ளிக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.
அலிகர் முஸ்லிம் பல்கலை.யின் சிறுபான்மை அந்தஸ்துக்கு எதிரான தீர்ப்பு ரத்து

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வில், 4:3 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அமர்வில் இடம்பெற்ற 3 நீதிபதிகள் எதிரான தீர்ப்பை அளித்ததை தொடர்ந்து, 'இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். எனவே, உச்சநீதிமன்ற நிர்வாகம் தலைமை நீதிபதியின் அறிவுறுத்தல்களை பெற்ற பிறகு, புதிய முறையான அமர்வில் விசாரணை மேற்கொள்ள இந்த வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்' என்று தலைமை நீதிபதி தீர்ப்பளித்தார்.

வழக்கின் பின்னணி: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்து சர்ச்சை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக எஸ். ஆசீஷ் பாஷா என்பவருக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான வழக்கில் கடந்த 1967-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 'அரசின் நிதியுதவியுடன் மத்திய பல்கலைக்கழகமாக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் செயல்பட்டுவரும் நிலையில், சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்தை கோர முடியாது' என்று தீர்ப்பளித்தது. இதனால், பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை நிறுவன அந்தஸ்து ரத்தானது.

இந்நிலையில், 1981-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக திருத்தச் சட்டத்தின் மூலம், இந்த பல்கலைக்கழகம் மீண்டும் சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்தை பெற்றது.

This story is from the November 09, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 09, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை
Dinamani Chennai

கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டை அருகேயுள்ள வல்லம் கிராமத்தில் 1901 ஏப்ரல் 5-இல் பிறந்தவர் சுப்பையா சிவசங்கர நாராயண பிள்ளை என்ற எஸ்.எஸ்.பிள்ளை. இவர் கணிதத்தில் 76 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அற்புதச் சாதனைகளைப் புரிந்தார்.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

மகா கும்ப மேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயில்

ஜனவரி 13 முதல் பிப்ரவரி வரை உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவின் போது, செக்டார் 6-இல் உள்ள வாசுகி கோயிலுக்கு அடுத்து ஏழுமலையானின் மாதிரி கோயிலை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு கூறினார்.

time-read
1 min  |
January 05, 2025
தச்சன்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு
Dinamani Chennai

தச்சன்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு

மதுரை மாடுபிடி வீரர் ஸ்ரீதருக்கு பரிசு

time-read
1 min  |
January 05, 2025
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர்
Dinamani Chennai

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர்

பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டின் சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டார்.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 7% அதிகரிப்பு

கடந்த டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,028 கோடி டாலராக சரிவு

கடந்த மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,027.9 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

வங்கதேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை

பதவியிலிருந்து அகற்றப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி!
Dinamani Chennai

நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி!

நாட்டின் 57.2 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாணவர்களுக்கான கணினி வசதி இருப்பதும், 53.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருப்பதும் மத்திய கல்வி அமைச்சகத்தின் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 'யுடிஐஎஸ்இ' தரவுகளில் தெரிய வந்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

12 மாதங்கள் காணாத சரிவு

இந்திய உற்பத்தித் துறை கடந்த டிசம்பரில் 12 மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
எஃப்சி கோவா அபார வெற்றி
Dinamani Chennai

எஃப்சி கோவா அபார வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது எஃப்சி கோவா.

time-read
1 min  |
January 05, 2025