குற்றச் சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்களுக்கு சொந்தமான கட்டடங்களை விதி களை மீறியதாகக் கூறி, புல்டோசர் மூலம் இடிக்கும் மாநில அரசுகளின் நடவடிக்கை சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் புதன்கிழமை (நவ.13) தீர்ப்பளித்தது.
அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை: அரசு அதிகாரிகள் தங்களை நீதிபதிகள் போன்று நினைத்துக் கொண்டு குடிமக்கள் மீது இது போன்ற நடவடிக்கையை மேற்கொள்வது, அதிகாரப் பகிர்வு தத்துவத்தை மீறும் செயலாகும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு அதிகாரிகள் பொறுப்பேற்கச் செய்யப்படுவர் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதற்கான வழிகாட்டுதலையும் வகுத்து உத்தரவிட்டனர்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுவோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் கட்டடங்கள், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினருக்குச் சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றச்சாட்டுக்குள்ளானவர் என்பதற்காக மட்டுமே ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பி, தீர்ப்பு வழங்கப்படும் வரை குற்றஞ்சாட்டப்படுவோரின் கட்டடங்களை புல்டோசர் மூலம் இடிக்கத் தடை விதித்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை அளித்த 95 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் விவரம்: சட்டம் என்பது நியாயமானதாகவும், மனித உரிமைகளையும் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும்.
This story is from the November 14, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 14, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக அரசின் சாதனைத் திட்டங்களால், வரும் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
அறிவியல் சார்ந்த கூட்டுறவுத் துறையால் விவசாயம் லாபகரமாகும்
மத்திய அமைச்சர் அமித் ஷா
சம்பல் வீடுகள் இடிப்பு: அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உச்சநீதிமன்ற தடையையும் மீறி வீடுகளை அதிகாரிகள் இடித்து வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு
ம.பி.: 17 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் மூடல் - அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
மத்திய பிரதேசத்தில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 இடங்களில் மதுக்கடைகளை மூட வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - சீமான்
இடைத்தேர்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்
வக்ஃப் மசோதா கூட்டத்தில் அமளியால் நடவடிக்கை
வள்ளுவர் கோட்டப் பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு
வள்ளுவா் கோட்டப் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
ஜன. 27-இல் இபிஎஃப் குறைதீர் கூட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சென்னை-புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், குறைதீர் முகாம் வரும் திங்கள்கிழமை (ஜன. 27) கீழ்கண்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.