இது நீறுபூத்த நெருப்பாக நீடித்துவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இணக்கமற்ற போக்கின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேச அமைச்சரவை கடந்த நவம்பர் 4-ஆம் தேதி இரவு கூடி, டிஜிபி நியமன புதிய விதிகள் 2024-க்கு ஒப்புதல் வழங்கியது. இதன்படி மாநில காவல் துறை தலைமை இயக்குநரை நியமிக்க யுபிஎஸ்சி-க்கு தகுதிவாய்ந்த அதிகாரிகளின் பட்டியலை அனுப்பி அது இறுதிப்படுத்திய 3 அதிகாரிகளில் ஒருவரை மாநில முதல்வர் தேர்வு செய்து நியமிக்கும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள்: உ.பி. புதிய நியமன விதிகளின்படி மாநில டிஜிபியை தேர்வு செய்யும் குழுவிற்கு மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைவராக இருப்பார். மாநில அரசின் தலைமைச் செயலர், யுபிஎஸ்சி தலைவர் அல்லது அவரால் முன்மொழியப்படும் ஒருவர், மாநில உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் அல்லது முதன்மைச் செயலர், ஓய்வு பெற்ற டிஜிபி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர். அத்துடன் டிஜிபி ஆக நியமிக்கப்படுபவர் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலத்தை கொண்டிருப்பார். தேர்வு செய்யும் முன்பாக அவருக்கு குறைந்தது ஆறு மாதங்கள் பதவிக்காலம் இருக்க வேண்டும் என்கிறது புதிய விதிகள்.
This story is from the November 15, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 15, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
துனிசியா: அகதிகள் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு
துனிசியாவின் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உச்சம் தொட்ட தங்க இறக்குமதி: தரவுகளை மறு ஆய்வு செய்யும் அரசு
கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் தங்க இறக்குமதி இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெடரல் ரிசர்வ் அறிவிப்பின் தாக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
வட்டி விகிதங்கள் மீதான அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் அறிவிப்பைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
சுஸுகி மோட்டார்சைக்கிள் விற்பனை 8% உயர்வு
இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி மோட்டார்சைக்கிளின் மொத்த விற்பனை கடந்த நவம்பரில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் சமரசத்துக்குத் தயார்: புதின்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் விவகாரத்தில் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப்புடன் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.
யேமனில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்
தங்கள் மீது ஏவுகணை வீசப்பட்டதற்குப் பதிலடியாக, யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது.
பொதுவான இடத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்கள்
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி விவகாரத்தில் நீடித்த இழுபறி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.
முதலீடுகளை ஈர்க்க முயற்சி: இந்திய தொழிலதிபர்களுடன் பிரிட்டன் பிரதமர் சந்திப்பு
பிரிட்டனுக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இந்தியாவைச் சேர்ந்த 13 பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாகிகளை பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் சந்தித்துப் பேசினார்.
எந்த வருத்தமும் இல்லை: அஸ்வின்
'எந்தவொரு வருத்தமும் இல்லாமல் தான் ஓய்வு பெறுகிறேன். இது எனது உள்ளுணர்வு அடிப்படையிலான முடிவு' என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.
டி20 தொடரை வென்றது இந்தியா
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது. இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியது.