அரியலூர், நவ. 15: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த மகிமைபுரத்தில் ரூ. 1,000 கோடி மதிப்பீட்டிலான காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்தல் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக ஜெயங்கொண்டத்துக்கு வியாழக்கிழமை இரவு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான பயணியர் மாளிகையில் தங்கினார்.
This story is from the November 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விவசாய சங்க தலைவர் உடல்நிலை கவலைக்கிடம்
கடந்த 24 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவாலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
அமித் ஷா, ராகுல் விவகாரம்: முடங்கியது நாடாளுமன்றம்
சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கர் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து, பாஜக எம்.பி.க்களை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆகிய விவகாரங்களால் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை கடும் அமளி ஏற்பட்டது. இதனால், இரு அவைகளும் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டன.
வக்ஃப் மசோதாவுக்கு ஆதரவு கோரி 350 எம்.பி.க்களிடம் விஹெச்பி பேச்சு
வக்ஃப் மசோதாவுக்கு ஆதரவளிக்க வலியுறுத்தி இதுவரை பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 350 எம்.பி.க்களை அணுகியதாக விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது.
போலி மாணவர் சேர்க்கை: 29 பள்ளிகளில் சிபிஎஸ்இ குழு திடீர் ஆய்வு
போலி மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் பள்ளிகளை மீது நடவடிக்கை எடுக்க தில்லி, பெங்களூரு, வாரணாசி, குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள 29 பள்ளிகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) குழு அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை
'சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரை அவ மதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை நோட்டீஸ் அளித்தார்.
இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள்
தமிழகத்தில் 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் பணிபுரியும் தாய்மார்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களின் குழந்தைகளைக் காக்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
காஞ்சிபுரம் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: 394 மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கம்
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் 750 படுக்கைகளுடன் கூடிய ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், 394 மருத்துவப் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
தன்கருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நோட்டீஸ் நிராகரிப்பு
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் பதவி நீக்கக் கோரி அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸை நிராகரித்து, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உத்தரவிட்டுள்ளார்.
ஆயுஷ் மருத்துவத் திட்டங்கள்: தமிழகத்துக்கு மத்திய அரசு பாராட்டு
ஆயுஷ் மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.