பாவப்பட்ட விமானப் பயணிகள்!
Dinamani Chennai|November 28, 2024
நீர்வாகக் காரணங்களுக்காக விமானங்கள் 'ரத்து' என்ற தலைப்புச் செய்தி கடந்த சில நாட்களாகவே நமது செய்தி ஊடகங்களில் அடிக்கடி தென்படத் தொடங்கியுள்ளது.
எஸ். ஸ்ரீதுரை

இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் இயக்கப்படவேண்டிய அறுபது வழித்தடங்களுக்குரிய பயணிகள் விமானங்களின் இயக்கத்தை ஏர்இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. குறிப்பாக இந்திய, அமெரிக்க நகரங்களுக்கு இடையிலான இயக்கத்தை ரத்து செய்துள்ளது. இது விமானப் பயணத்தையே நம்பிருப்பவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இவ்வாரம் திங்கட்கிழமை மட்டும் சென்னையிலிருந்து சிங்கப்பூர், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளுக்குச் செல்ல வேண்டிய எட்டு விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அந்நாடுகளிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய இணைவிமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், இங்கிருந்து இயக்கப்படவேண்டிய இவ்விமான சர்வீஸ்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விமானங்கள் ஏர் இந்தியா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களால் இயக்கப்படுபவையாகும்.

இது மட்டுமா? கடந்த வாரம் சென்னையிலிருந்து திருவனந்தபுரம், பெங்களூர், புவனேஸ்வரம், கொல்கத்தா, சிலிகுரி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும், அவற்றின் இணை விமானங்களுமாக பத்து விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டன.

நமது நாட்டின் தலைநகரமாகிய புது தில்லி சமீப காலமாக கடுமையான காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விமானங்களின் வருகை, புறப்பாடு ஆகியவை தாமதமாவதும், விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுவது அல்லது ரத்து செய்யப்படுவதும் ஒரு தொடர் நிகழ்வாகவே ஆகிவிட்டிருக்கின்றது.

This story is from the November 28, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 28, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

விளம்பர பதாகைகளை அகற்ற தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை, நவ. 29: புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, விளம்பர பதாகைகள் வைத்திருப்போர் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்றி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
Dinamani Chennai

மழைக்காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
Dinamani Chennai

புதுச்சேரி-கடலூரில் 7, நாகையில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்

புதுச்சேரி/நெய்வேலி/நாகப்பட்டினம்/காரைக்கால், நவ.29: வங்கக் கடலில் ஃபென்ஜால் புயல் உருவானதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம், கடலூர் துறைமுக வளாகங்களில் வெள்ளிக்கிழமை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

time-read
1 min  |
November 30, 2024
Dinamani Chennai

செங்கல்பட்டு, விழுப்புரத்துக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பிவைப்பு

சென்னை, நவ. 29: செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
November 30, 2024
புதுச்சேரியில் கடல் சீற்றம்: பல மீட்டர் உயரம் எழும்பிய அலைகள்
Dinamani Chennai

புதுச்சேரியில் கடல் சீற்றம்: பல மீட்டர் உயரம் எழும்பிய அலைகள்

புதுச்சேரி, நவ.29: வங்கக் கடலில் 'பென்ஜால்' புயல் உருவானதை யொட்டி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது. அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி ஆர்ப்பரித்தன.

time-read
1 min  |
November 30, 2024
விலை உயரும் பிஎம்டபிள்யு மோட்டார் சைக்கிள்கள்
Dinamani Chennai

விலை உயரும் பிஎம்டபிள்யு மோட்டார் சைக்கிள்கள்

புது தில்லி, நவ. 29: பிஎம்டபிள்யு வின் இருசக்கர வாகனப்பிரிவான பிஎம்டபிள்யூ மோட்டாராட், இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்வு
Dinamani Chennai

சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்வு

மும்பை, நவ.29: பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய முன்னணி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ், 759 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி 24,100-ஐ கடந்த நிலையில் நிறைவடைந்தது.

time-read
1 min  |
November 30, 2024
Dinamani Chennai

கிழக்கு உக்ரைனில் ரஷியா மேலும் முன்னேற்றம்

டொனட்ஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த ரஸ்டோல்னோயே பகுதி மீட்கப்பட்டது. டொனட்ஸ்க் மற்றும் ஸபோரிஷியா பிராந்தியங்களுக்கு இடையே அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த வேலிகயா நோவோஸெல்கா நகருக்கு வெறும் ஏழு கி.மீ. தொலைவில் அந்தப் பகுதி அமைந்துள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
Dinamani Chennai

யுரேனிய செறிவூட்டலை ஈரான் விரிவாக்கும்

ஐஏஇஏ எச்சரிக்கை

time-read
1 min  |
November 30, 2024
காஸாவில் இஸ்ரேல் படை நிலைத்திருக்கும்
Dinamani Chennai

காஸாவில் இஸ்ரேல் படை நிலைத்திருக்கும்

ஜெருசலேம், நவ. 29: காஸா போர் முடிவுக்கு வந்தாலும், அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினர் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பார்கள் என்று அந்த நாட்டு பாதுகாப்பு கேபினட் உறுப்பினரும், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏவி டிச்டர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 30, 2024