'எவ்வாறு மண்டபத்தூண்களைச் செதுக்கினார்கள்; எவ்வாறு நிறுத்தி கட்டினார்கள்' என்பதெல்லாம் வியக்கவைக்கிறது. கோயில்கள் மன்னர்களின் விருப்பப்படி கட்டப்பட்டாலும், அதனை உரிய சிற்ப நூல்களின்படி கட்டியவர்கள் சிற்பிகள்தான். தமிழகக் கோயில்கள் கட்டடக்கலை சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்திலும் இருந்தன. இவை காலப்போக்கில் அழியும் தன்மை உடையதால் அக்காலக் கோயில் அமைப்பைப் பற்றி அறிந்து கொள்ள இயலவில்லை. ஆனால், பல்லவ மன்னர்கள் காலத்திலிருந்து கற்கோயில்கள் அமைக்கப்பட்டன.
விழுப்புரம் அருகே உள்ள மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலானது பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் காலத்தில் எடுப்பிக்கப்பட்டது. திருமால், நான்முகன், சிவனுக்கு மரமின்றி, சுதையின்றி, உலோகமின்றி, செங்கலின்றி தோற்றுவித்ததாகக் கூறும் கல்வெட்டு இங்குள்ளது.
கற்றளிகள்: தேவார மூவரான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் போற்றிப் பாடப்பெற்ற பெரும்பாலான தலங்கள் செங்கற்கோயிலாக இருந்தன. பல்லவர் காலத்தில் தான் கோயில்கள் கருங்கற்களால் கட்டப்பட்டன. இந்தப் பணி சோழ மன்னர் காலத்தில் மேலும் சிறப்பு அடைந்தது. கோயில்கள் முழுவதும் கற்கோயிலாக மாற்றப்பட்டன. இதனை 'கற்றளிகள்' எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கோயில்களை கற்றளிகளாக மாற்றுவதற்கும், அதில் கல்வெட்டுகளைப் பொறிப்பதற்கும் சிற்பிகள் தேவைப்பட்டனர். இவர்களை சூத்திரகிராகி, தச்சர், வர்த்தகி, ஸ்தபதி என நான்கு பிரிவுகளாக சிற்ப நூல்கள் குறிக்கின்றன.
'சூத்திரகிராகி' என்பவர் நூல் பிடித்து கல்லின் மீது வேண்டிய அளவுகளைக் குறியிட்டு கொடுப்பவர். 'தச்சர்' என்பவர் பல்வேறு உருவங்களை செதுக்கும் வல்லமை படைத்தவர். குறிப்பிட்ட அளவுகளுக்கு ஏற்ப செதுக்கப்பட்ட கற்களையும் சிற்பங்களையும் உரிய இடத்தில் பொருத்தி கட்டடங்களை எழுப்ப வல்லவர் 'வர்த்தகி' எனப்படுவார். இவர்கள் அனைவரின் பணிகளை ஒன்றிணைத்து முழுப் பொறுப்பை ஏற்று முடிப்பவர் 'ஸ்தபதி' என அழைக்கப்படுவார்.
கோயில்களில் உள்ள பெரும்பாலான கல்வெட்டுகளில் சிற்பிகள் 'தச்சர்' என்றே குறிக்கப்படுவதைக் காணலாம். பல கோயில்களில் பணிபுரிந்த சிற்பிகளின் பெயர்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புகள் போன்றவையும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
This story is from the December 01, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 01, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கோயில்களைக் கட்டிய சிற்பிகள்
கோயில்களில் காணப்படும் அழகிய சிற்பங்கள், கட்டடக்கலை அமைப்பில் சிறந்து விளங்கும் மண்டபங்கள், கோபுரங்கள், தூண்கள், மதில் சுவர்கள் வியப்படைய வைக்கின்றன.
சாதனை...
மக்களிடையே வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டைவாசிகளின் ஆதரவில் 'மகாத்மா காந்தி நூல் நிலையம்' எழுபதாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் பழங்குடியினர் மோதல்: உயிரிழப்பு 124-ஆக அதிகரிப்பு
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் பிரிவுகளைச் சேர்ந்த இரு பழங்குடியினர் இடையே கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 124-ஆக அதிகரித்தது.
விலை உயரும் சோப்புகள், அழகுசாதன பொருள்கள்
பாமாயில் மூலப்பொருள் விலை அதிகரித்துள்ளதால் அதைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப்புகளின் விலையையும் துரித நுகர்பொருள் (எஃப்எம்சிஜி) நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,658 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,658.2 கோடி டாலராக சரிந்தது.
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் தயார்
நேட்டோ பாதுகாப்பின் கீழ் எஞ்சிய பகுதிகள்: ஸெலென்ஸ்கி நிபந்தனை
கருணை மரணம்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
மீளமுடியாத நோயால் மரணத்தை எதிர்நோக்கி அவதிப்படுவோருக்கு கருணையின் அடிப்படையில் செயற்கையான மரணத்தை வழங்க வகை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கையை 233 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 233 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா.
இறுதிச் சுற்றில் நுழைந்தார் பி.வி. சிந்து
சையத் மோடி சர்வதேச சூப்பர் 300 பாட்மின்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் நுழைந்தார் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து.
5-ஆவது சுற்று டிரா
ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி யின் ஒரு பகுதியாக 5-ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டிங் லிரேனுடன் (சீனா) போராடி டிரா கண்டார் இந்திய இளம் வீரர் டி. குகேஷ்.