சட்டப்பேரவையில் துணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் தங்கமணி பேசியதாவது:
புயலின்போது, கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. அந்தச் செய்தியை மக்களிடம் முறையாகக் கொண்டு சேர்த்திருந்தால், இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. மேலும், சாத்தனூர் ஏரியிலிருந்து 2 லட்சம் கன அடி நீரை முறையாக அறிவித்து திறந்துவிட்டிருந்தால், பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். திருவண்ணாமலையில் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் மட்டும் நிவாரணமாக வழங்கியுள்ளீர்கள். கள்ளச்சாராயத்தால் இறந்தால் ரூ.10 லட்சம் தருகிறீர்கள். மண்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக தலா ரூ.15 லட்சம் தர வேண்டும் என்றார்.
அமைச்சர் விளக்கம்: அப்போது, வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குறுக்கிட்டு கூறியதாவது:
புயல் வருவதற்கு ஒரு வாரம் முன்பே, அதிகாரிகளை அழைத்து, முதல்வர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தார். சாத்தனூர் அணை திறக்கப்பட்ட போதும்கூட, 5 முறை மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்ட பிறகுதான் நீர் திறந்துவிடப்பட்டது. அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்காமல் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிட்டதைப்போல, சாத்தனூர் அணையை திறக்கவில்லை. அவசர கட்டுப்பாட்டு மையத்திலிருந்து லட்சக்கணக்கான மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துதான் திறந்தோம்.
அமைச்சர் பொன்முடி: வீடுகளுக்குள்ளே தண்ணீர் புகுந்தாலே நிவாரணம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். கூரை வீடுகள் இடிந்திருந்தால் ரூ.10 ஆயிரம் வழங்கக் கூறியுள்ளார். அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு கொடுக்கச் சொல்லியுள்ளார். பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு முடிந்த பிறகு நிவாரணம் வழங்கப்படும்.
This story is from the December 11, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 11, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இணைய குற்றப் புலனாய்வில் ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா புரிந்துணர்வு
இணைய (சைபர்) குற்றப் புலனாய்வு விசாரணையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே உடன்பாடு கையொப்பமாகியிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமித் ஷாவுடன் மணிப்பூர் ஆளுநர் சந்திப்பு
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
54-ஆவது நாளாக உண்ணாவிரதம்: தல்லேவால் உடல்நிலை கவலைக்கிடம்
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாய அமைப்பின் தலைவர் ஜக்ஜீத் சிங் தல்லேவால் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் சனிக்கிழமை 54-ஆவது நாளாக நீடித்தது.
அருந்ததியர் உள்ஒதுக்கீடு சமத்துவத்தை நோக்கி வழிநடத்தும்: தமிழக அரசு
அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்டம், சமத்துவத்தை நோக்கி தமிழ்நாட்டை வழிநடத்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கனடா பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளி எம்.பி. போட்டி
கனடா பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர ஆர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
எடுத்த இடத்தில் வைக்கவும்!
'இந்த வீட்ல வச்ச இடத்தில் எதுவும் ஒரு இருக்காது’ கேட்காத வீடே இல்லை என்று சொல்லி விடலாம். குறிப்பாக தாய்மார்கள் இப்படி த்தான் அங்கலாய்த்துக் கொள்வார்கள்.
சென்னையைத் தொடர்ந்து 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள்: தமிழக அரசு
சென்னையைத் தொடர்ந்து, 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஐடிஎஃப் 50: அங்கிதா-பெயின்ஸ் சாம்பியன்
புது தில்லியில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டபிள்யு 50 டென்னிஸ் போட்டி மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-பிரிட்டனின் பெயின்ஸ் பட்டம் வென்றனர்.
சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணமா?
சென்னை கடற்கரைகளில் 100-க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி எனப்படும் பச்சை நிற ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன.
செய்யக் கூடாதன செய்யோம்!
கிட்டமிடாமல் எந்தப் பணியையும் செய்யலாகாது. அப்படிச் செய்யின் அது நன்முறையில் அமையாது என்பது வல்லோர் வகுத்த விதி.