பொய்ப் பிரசாரங்கள், அவதூறுகள், ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் மத்திய அரசு என எல்லா தடைகளையும் கடந்துதான் திமுக அரசு செயல்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அரசு திட்டப் பணிகள் தொடர்பாக மாவட்டங்களுக்கே நேரில் சென்று கள ஆய்வு செய்வேன் என்று சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, அரசின் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக ஈரோட்டுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சோலார் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, ரூ.951 கோடி மதிப்பிலான 559 நிறைவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.133 கோடி மதிப்பிலான 222 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், சுமார் 50,000 பயனாளிகளுக்கு ரூ.284 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்துக்கு திமுக அரசு செய்திருக்கும் பணிகளின் பட்டியல் மிகவும் நீளமானது. அத்திக்கடவு - அவிநாசி திட்டம், ஈரோட்டில் மஞ்சள் பொதுவசதி மையம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
This story is from the December 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கோயில்களில் பயன்பாடின்றி உள்ள 1,000 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
தமிழக கோயில்களில் பயன்பாடின்றி உள்ள 1,000 கிலோ எடையுள்ள தங்கத்தை வங்கியில் முதலீடு செய்து, ஆண்டுக்கு ரூ.12 கோடி வட்டியாகப் பெற இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்து வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
நவம்பரில் சரிந்த நவரத்தின ஏற்றுமதி
கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி 12.9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
மேலும் இறுகியது 'கரடி'யின் பிடி: சென்செக்ஸ் 1,176 புள்ளிகள் வீழ்ச்சி
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் கரடியின் பிடி மேலும் இறுகியது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,176 புள்ளிகளை இழந்தது.
ஹோண்டா கார்கள் விலை உயரும்
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ், தனது தயாரிப்புகளின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.
எம்ஹெச்370 விமானம்: புதிய தேடுதல் வேட்டைக்கு மலேசியா ஒப்புதல்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம் ஹெச்370 விமானத்தைத் தேடும் பணிக்கு மலேசிய அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
முடங்கும் அபாயத்தில் அமெரிக்க அரசுத் துறைகள்
நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் புறக்கணிப்பு
குரோஷியா பள்ளியில் கத்திக்குத்து: சிறுமி உயிரிழப்பு
தென்மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவிலுள்ள பள்ளியொன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் சிறுமி உயிரிழந்தார்.
ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா (89) காலமானார்
ஹரியாணா முதல்வராக 5 முறை பதவி வகித்தவர், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா, மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் மாற்றம் நேதன் மெக்ஸ்வீனி நீக்கம்; சாம் கான்ஸ்டஸ் சேர்ப்பு
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள இந்திய வீரர் அஸ்வின், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின்போது பேட் செய்ய வருவதாக விராட் கோலிக்கு புதிய பதிலை வழங்கியுள்ளார்.