சமமான தேர்வுமுறை தேவை!
Dinamani Chennai|December 23, 2024
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏனைய தேர்வாணையங்களுக்கு முன்மாதிரியாக, பல புதுமைகளை போட்டித் தேர்வுகளில் அறிமுகம் செய்த பெருமைக்குரியது. இந்தியத் தேர்வாணையங்களுள் தொன்மையானது.
மு. சிபிகுமரன்
சமமான தேர்வுமுறை தேவை!

கடந்த சில ஆண்டுகளாக இந்தியக் குடிமைப் பணிகளில் தமிழ்நாட்டுத் தேர்வர்களின் தேர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்து வருகிறது. இச்சூழலில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை எழுதி வருகின்ற தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கு உற்ற நம்பிக்கையாய் விளங்கி வருகின்றது என்பது நிதர்சனம்.

ஓர் ஆண்டில் பல்வேறு வகையான தேர்வுகளின் மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் பணியிடங்களை இத்தேர்வாணையம் நிரப்பி வருகிறது. சமீப காலங்களில் விரைவாகத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அதனை வெற்றிகரமாகவும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

தேர்வாணையத்திற்கு சமீபத்தில் நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் விரைந்து செயல்படுகின்ற ஆற்றலும், துணிந்து முடிவெடுக்கின்ற திறனும் பெற்றவர்கள் என்பது அவர்களது கடந்த காலப் பணித் திட்டங்களை கவனித்தவர்கள் நன்கு அறிவர். அதனால் தேர்வாணைய செயல்முறைகளில் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றங்களை தேர்வர்கள் எதிர்நோக்க முடியும்.

சமீபத்தில் குரூப் 2ஏ முதன்மைத்தேர்வு ஆன்லைன் என்பது நீக்கப்பட்டு முந்தைய தேர்வுகள்போல ஓஎம்ஆர் கொள்குறிப் படிவத்தின் வழியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறைச் சாத்தியங்களை ஆராய்ந்த பிறகே இத்தகைய முடிவிற்கு தேர்வாணையம் வந்திருக்க முடியும்.

கடந்த காலங்களில் இது போன்றதொரு முயற்சியினை மேற்கொண்டு பல்வேறு குழப்பங்கள் நேர்ந்ததனை தேர்வாணையம் மறந்திருக்க முடியாது. எனினும், குறைவான எண்ணிக்கையில் தேர்வர்கள் எழுதுகின்ற தேர்வுகளில் இதனை வெற்றிகரமாகச் செயல்படுத்திய பிறகு தேர்வாணையம் இதுபற்றி யோசிக்கலாம்.

அதேபோல தேர்வாணையம் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயத்தினை இங்கே முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது.

200 வினாக்கள் கொண்ட குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வினைப் பொருத்தவரை 100 வினாக்கள் பொது அறிவு மற்றும் திறனறிதல் பகுதியில் இருந்தும் ஏனைய 100 வினாக்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்தும் கொள்குறி வினாக்களாகவே இடம் பெற்று வருகின்றன.

மேலும் குரூப் 2ஏ முதன்மைத் தேர்வும் கொள்குறி வினாக்களாக பொது அறிவு மற்றும் திறனறிதல் நீங்கலாக பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து 60 வினாக்கள் இடம் பெறுகின்றன.

This story is from the December 23, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 23, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
திருச்செந்தூர் கோயிலில் திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
Dinamani Chennai

திருச்செந்தூர் கோயிலில் திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்

மார்கழி மாதத்தையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

time-read
1 min  |
December 23, 2024
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்களை நாட்டுடைமையாக்கி அரசாணை வெளியீடு
Dinamani Chennai

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்களை நாட்டுடைமையாக்கி அரசாணை வெளியீடு

முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்கப்பட்ட அரசாணை அவரது துணைவியாரான ராஜாத்தி அம்மாளிடம் வழங்கப்பட்டது.

time-read
1 min  |
December 23, 2024
நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்: திரும்ப எடுத்துச்சென்ற கேரள அரசு
Dinamani Chennai

நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்: திரும்ப எடுத்துச்சென்ற கேரள அரசு

திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, 18 லாரிகளில் கேரள மாநிலம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை திரும்ப எடுத்துச்செல்லப்பட்டது.

time-read
2 mins  |
December 23, 2024
குமரியில் டிச. 30, 31இல் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
Dinamani Chennai

குமரியில் டிச. 30, 31இல் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா

கன்னியாகுமரியில் இம்மாதம் 30, 31 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

time-read
1 min  |
December 23, 2024
Dinamani Chennai

சொந்த போர் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்

விமானி காயம்

time-read
1 min  |
December 23, 2024
தைவானுக்கு ராணுவ உதவி: அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
Dinamani Chennai

தைவானுக்கு ராணுவ உதவி: அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு

தைவானுக்கு ராணுவ உதவியை அறிவித்த அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, அமெரிக்கா நெருப்பு விளையாடுவதாக எச்சரித்துள்ளது.

time-read
1 min  |
December 23, 2024
நைஜீரியா: கூட்ட நெரிசலில் 32 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

நைஜீரியா: கூட்ட நெரிசலில் 32 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
December 23, 2024
போர்கள் நிறுத்தப்பட வேண்டும்; போப் ஃபிரான்சிஸ்
Dinamani Chennai

போர்கள் நிறுத்தப்பட வேண்டும்; போப் ஃபிரான்சிஸ்

உலகில் நடைபெறும் போர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஃபிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினார்.

time-read
1 min  |
December 23, 2024
தென்மேற்கு மண்டல பல்கலை. நீச்சல் போட்டி: அண்ணா பல்கலை. மாணவருக்கு தங்கம்
Dinamani Chennai

தென்மேற்கு மண்டல பல்கலை. நீச்சல் போட்டி: அண்ணா பல்கலை. மாணவருக்கு தங்கம்

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் ஐஎஸ்டியில் நடைபெறும் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவர், மகளிர் நீச்சல் போட்டியில் முடிவுகளை விளையாட்டுத் துறை இயக்குநர் ஆர். மோகன கிருஷ்ணன் வெளியிட்டார்.

time-read
1 min  |
December 23, 2024
இந்தியாவுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்
Dinamani Chennai

இந்தியாவுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்

இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் டி.20 கிரிக்கெட் தொடர்களுக்கான இங்கிலாந்து அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
December 23, 2024