அதன் மையக் கதாபாத்திரமான கோவிந்தன்குட்டி தன் குடும்பத்திலுள்ள அனைவராலும் ‘அசுரவித்து’ என அழைக்கப்பட்டவர். அந்தப் பெரிய குடும்பம் செல்வத்தையும் அதிகாரத்தையும் இழந்து அழிந்து கொண்டிருந்தது. அதற்கான காரணங்கள் பல. நிலவுடைமைச் சமூகம் இல்லாமலாகிக் கொண்டிருந்தது முதல் குடும்பத்தின் தலைவர்களின் ஊதாரித்தனமும் நீதிமன்ற வழக்குகளும் என. ஆனால், எல்லாமே கோவிந்தன்குட்டி பிறந்தமையால் என்று குடும்பத்தினர் முடிவு கட்டுகின்றனர். குடும்பத்தை அழிப்பவன் என்னும் பொருளில் ‘அசுரவித்து’ என்னும் வசைப்பெயர் அமைகிறது.
க்ஷத்ரிய குடிகளில் ஓர் அசுரனின் குருதித்தொடர்பு உருவானால் அதில் பிறக்கும் குழந்தை அக்குடியை அழிக்கும் என்பது ஒரு வைதிக நம்பிக்கை. கிருஷ்ணனின் குடியில் அசுரனின் ரத்தத்தால் பிறந்த சாம்பன் அக்குடி அழியக் காரணமானான் என்பது புராணத்துக்கான வைதிக விளக்கம்.
கோவிந்தன்குட்டியின் வாழ்க்கையே அந்தப் பெயருக்கு எதிரான அவனுடைய எதிர்வினைதான். அது வீம்புக்காக தன்னை ஒரு பொறுக்கியாக ஆக்கிக் கொள்வதில் முடிகிறது. ஒரு கட்டத்தில் கோவிந்தன் குட்டி இஸ்லாமியராக மதம் மாறுவதில் நாவல் முடிகிறது. அந்த மதமாற்றம் சரியா என்பதுதான் அம்மாவும் தோழிகளும் விவாதித்தது. பங்கஜவல்லி அத்தை சொன்னாள். “நம்ம வீட்டுக் குள்ள முளைச்ச அசுரவித்தை நாம பிடுங்கி பக்கத்துத் தோட்டத்திலே போடுறது மாதிரிலாடீ அது?” என் அம்மா சொன்னார். “நமக்கு அசுரவித்து அவங்களுக்கு அமிர்தவித்தாக இருக்கலாமே? தோட்டத்திலே நாவல்மரம் நின்னா பிடுங்கி வீசுவோம். ஆற்றங்கரையிலே நிக்குற அந்த நாவல்மரம் ஆயிரம் லெட்சம் பக்ஷிகளுக்கு அமிர்தமாக்குமே? ஆற்றங்கரையில் நின்றிருக்கும் அந்த மாபெரும் நாவல்மரத்தைப் பார்க்கையில் எல்லாம் நான் சொல்லிக்கொள்வேன். அமிர்த மரம்”.
1992-இல் எனக்கு ‘ஜகன்மித்யை’ என்னும் கதைக்காக கதா சம்மான் என்னும் தேசிய விருது கிடைத்தது. அதே விருது மலையாளத்துக்காக எம்.டி.க்கு அவருடைய ‘கொச்சு கொச்சு பூகம்பங்கள்’ என்னும் கதைக்காக கிடைத்தது. குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அவ்விருதை வழங்கினார். அதைப் பெறுவதற்காக தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றிருந்தபோதுதான் நான் எம்.டி.யை நேரில் சந்தித்தேன். அன்று அம்மாவைப் பற்றி அவரிடம் சொன்னேன். அப்போது என் அம்மா உயிருடன் இல்லை.
This story is from the December 27, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 27, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழா முன்னேற்பாடுகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
இணையவழி பட்டா மாறுதல் சேவை 4 நாள்களுக்கு நிறுத்தம்
தொழில்நுட்பப் பணி காரணமாக, இணையவழி பட்டா மாறுதல் சேவைகள் நான்கு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய அணையால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீனா
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏழு நாள்கள் அரசு முறை துக்கம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து, தமிழகத்திலும் ஏழு நாள்கள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பல்கலை.கள், கல்லூரிகளில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுக்களின் செயல்பாடுகள் தீவிர ஆய்வு
அமைச்சர் கோவி. செழியன்
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் மன்மோகன் சிங்
தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுவர காரணமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மன்மோகன் சிங் என்றொரு மாமனிதர்!
துவாக ஒரு பிரபலமான மனிதரோ, உயர் பதவியில் இருக்கிற அல்லது இருந்த ஒருவரோ மறைந்து விட்டால் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சொல்வது சம்பிரதாயம். ஆனால், டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு, அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சிக்கு மாத்திரமல்லாமல், இந்திய தேசத்திற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று குறிப்பிட்டால், அது சம்பிரதாயத்திற்காக அல்ல - முற்றிலும் உண்மையான கூற்று.
என்னதான் இவர்களது ரசனையோ?
இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நவநாகரிகம் அல்லது 'ஸ்டைல்' என்ற பெயரில் தங்களது நடை, உடை, பாவனைகளில் புதிது புதிதாக ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருப்பார்கள் என்பது தெரிந்ததுதான்.
தடையை மீறி போராட்டம்: அதிமுக, பாஜகவினர் மீது வழக்கு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் வியாழக்கிழமை தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அதிமுகவினர், பாஜகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
900 அரங்குகளுடன் 48-ஆவது சென்னை புத்தகக் காட்சி
துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்